4.99 திருவையாறு - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
954 அந்திவட் டத்திங்கட் கண்ணியன்
ஐயா றமர்ந்துவந்தென்
புந்திவட் டத்திடைப் புக்குநின்
றானையும் பொய்யென்பனோ
சிந்திவட் டச்சடைக் கற்றை
யலம்பச் சிறிதலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றை
வளாவிய நம்பனையே. 4.99.1
955 பாடகக் கால்கழற் கால்பரி
திக்கதி ருக்கவந்தி
நாடகக் கால்நங்கை முன்செங்கண்
ஏனத்தின் பின்னடந்த
காடகக் கால்கணங் கைதொழுங்
காலெங்க ணாய்நின்றகால்
ஆடகக் காலரி மான்றேர்
வலவன்ஐ யாற்றனவே. 4.99.2
திருச்சிற்றம்பலம்
Goto Main book