MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    5.92 காலபாராயணம் - திருக்குறுந்தொகை


    திருச்சிற்றம்பலம்

    904 கண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப்
    பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல்
    கொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கைக்
    கொண்ட தொண்டரைத் துன்னிலுஞ் சூழலே. 5.92.1
    905 நடுக்கத் துள்ளும் நகையுளும் நம்பற்குக்
    கடுக்கக் கல்ல வடமிடு வார்கட்குக்
    கொடுக்கக் கொள்க வெனவுரைப் பார்களை
    இடுக்கண் செய்யப் பெறீரிங்கு நீங்குமே. 5.92.2
    906 கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்
    சீர்கொள் நாமஞ் சிவனென் றரற்றுவார்
    ஆர்க ளாகிலு மாக அவர்களை
    நீர்கள் சாரப் பெறீரிங்கு நீங்குமே. 5.92.3
    907 சாற்றி னேன்சடை நீண்முடிச் சங்கரன்
    சீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி
    ஆற்ற வுங்களி பட்ட மனத்தராய்ப்
    போற்றி யென்றுரைப் பார்புடை போகலே. 5.92.4
    908 இறையென் சொன்மற வேல்நமன் றூதுவீர்
    பிறையும் பாம்பு முடைப்பெரு மான்றமர்
    நறவம் நாறிய நன்னறுஞ் சாந்திலும்
    நிறைய நீறணி வாரெதிர் செல்லலே. 5.92.5
    909 வாம தேவன் வளநகர் வைகலுங்
    காம மொன்றில ராய்க்கை விளக்கொடு
    தாமந் தூபமுந் தண்ணறுஞ் சாந்தமும்
    ஏம மும்புனை வாரெதிர் செல்லலே. 5.92.6
    910 படையும் பாசமும் பற்றிய கையினீர்
    அடையன் மின்னம தீசன் அடியரை
    விடைகொ ளூர்தியி னானடி யார்குழாம்
    புடைபு காதுநீர் போற்றியே போமினே. 5.92.7
    911 விச்சை யாவதும் வேட்கைமை யாவதும்
    நிச்சல் நீறணி வாரை நினைப்பதே
    அச்ச மெய்தி அருகணை யாதுநீர்
    பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே. 5.92.8
    912 இன்னங் கேண்மின் இளம்பிறை சூடிய
    மன்னன் பாதம் மனத்துட னேத்துவார்
    மன்னும் அஞ்செழுத் தாகிய மந்திரந்
    தன்னி லொன்றுவல் லாரையுஞ் சாரலே. 5.92.9
    913 மற்றுங் கேண்மின் மனப்பரிப் பொன்றின்றிச்
    சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம்
    ஒற்றை யேறுடை யானடியே யல்லாற்
    பற்றொன் றில்லிகள் மேற்படை போகலே. 5.92.10

    914 அரக்கன் ஈரைந் தலையுமோர் தாளினால்
    நெருக்கி யூன்றியிட் டான்தமர் நிற்கிலுஞ்
    சுருக்கெ னாதங்குப் பேர்மின்கண் மற்றுநீர்
    சுருக்கெ னிற்சுட ரான்கழல் சூடுமே. 5.92.11

    திருச்சிற்றம்பலம்



Goto Main book