MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    5.95 இலிங்கபுராணம் - திருக்குறுந்தொகை


    திருச்சிற்றம்பலம்

    936 புக்க ணைந்து புரிந்தல ரிட்டிலர்
    நக்க ணைந்து நறுமலர் கொய்திலர்
    சொக்க ணைந்த சுடரொளி வண்ணனை
    மிக்குக் காணலுற் றாரங் கிருவரே. 5.95.1
    937 அலரு நீருங்கொண் டாட்டித் தெளிந்திலர்
    திலக மண்டலந் தீட்டித் திரிந்திலர்
    உலக மூர்த்தி யொளிநிற வண்ணனைச்
    செலவு காணலுற் றாரங் கிருவரே. 5.95.2
    938 ஆப்பி நீரோ டலகுகைக் கொண்டிலர்
    பூப்பெய் கூடை புனைந்து சுமந்திலர்
    காப்புக் கொள்ளி கபாலிதன் வேடத்தை
    ஓப்பிக் காணலுற் றாரங் கிருவரே. 5.95.3
    939 நெய்யும் பாலுங்கொண் டாட்டி நினைந்திலர்
    பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர்
    ஐயன் வெய்ய அழல்நிற வண்ணனை
    மெய்யைக் காணலுற் றாரங் கிருவரே. 5.95.4
    940 எருக்கங் கண்ணிகொண் டிண்டை புனைந்திலர்
    பெருக்கக் கோவணம் பீறி யுடுத்திலர்
    தருக்கி னாற்சென்று தாழ்சடை யண்ணலை
    நெருக்கிக் காணலுற் றாரங் கிருவரே. 5.95.5
    941 மரங்க ளேறி மலர்பறித் திட்டிலர்
    நிரம்ப நீர்சுமந் தாட்டி நினைந்திலர்
    உரம்பொ ருந்தி யொளிநிற வண்ணனை
    நிரம்பக் காணலுற் றாரங் கிருவரே. 5.95.6
    942 கட்டு வாங்கங் கபாலங்கைக் கொண்டிலர்
    அட்ட மாங்கங் கிடந்தடி வீழ்ந்திலர்
    சிட்டன் சேவடி சென்றெய்திக் காணிய
    பட்ட கட்டமுற் றாரங் கிருவரே. 5.95.7
    943 வெந்த நீறு விளங்க அணிந்திலர்
    கந்த மாமலர் இண்டை புனைந்திலர்
    எந்தை ஏறுகந் தேறெரி வண்ணனை
    அந்தங் காணலுற் றாரங் கிருவரே. 5.95.8
    944 இளவெ ழுந்த இருங்குவ ளைம்மலர்
    பிளவு செய்து பிணைத்தடி யிட்டிலர்
    களவு செய்தொழிற் காமனைக் காய்ந்தவன்
    அளவு காணலுற் றாரங் கிருவரே. 5.95.9
    945 கண்டி பூண்டு கபாலங்கைக் கொண்டிலர்
    விண்ட வான்சங்கம் விம்மவாய் வைத்திலர்
    அண்ட மூர்த்தி அழல்நிற வண்ணனைக்
    கெண்டிக் காணலுற் றாரங் கிருவரே. 5.95.10
    946 செங்க ணானும் பிரமனுந் தம்முளே
    எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலார்
    இங்குற் றேனென்றி லிங்கத்தே தோன்றினான்
    பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே. 11 5.95.11

    திருச்சிற்றம்பலம்



Goto Main book