MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    5.96 மனத்தொகை - திருக்குறுந்தொகை


    திருச்சிற்றம்பலம்

    947 பொன்னுள் ளத்திரள் புன்சடை யின்புறம்
    மின்னுள் ளத்திரள் வெண்பிறை யாயிறை
    நின்னுள் ளத்தருள் கொண்டிருள் நீங்குதல்
    என்னுள் ளத்துள தெந்தை பிரானிரே. 5.96.1
    948 முக்க ணும்முடை யாய்முனி கள்பலர்
    தொக்கெ ணுங்கழ லாயொரு தோலினோ
    டக்க ணும்மரை யாயரு ளெய்தலா
    தெக்க ணும்மிலன் எந்தை பிரானிரே. 5.96.2
    949 பனியாய் வெங்கதிர் பாய்படர் புன்சடை
    முனியாய் நீயுல கம்முழு தாளினுந்
    தனியாய் நீசரண் நீசல மேபெரி
    தினியாய் நீயெனக் கெந்தை பிரானிரே. 5.96.3
    950 மறையும் பாடுதிர் மாதவர் மாலினுக்
    குறையு மாயினை கோளர வோடொரு
    பிறையுஞ் சூடினை யென்பத லாற்பிறி
    திறையுஞ் சொல்லிலை எந்தை பிரானிரே. 5.96.4
    951 பூத்தார் கொன்றையி னாய்புலி யின்னதள்
    ஆர்த்தா யாடர வோடன லாடிய
    கூத்தா நின்குரை யார்கழ லேயல
    தேத்தா நாவெனக் கெந்தை பிரானிரே. 5.96.5
    952 பைம்மா லும்மர வாபர மாபசு
    மைம்மால் கண்ணியோ டேறுமைந் தாவெனும்
    அம்மா லல்லது மற்றடி நாயினேற்
    கெம்மா லும்மிலன் எந்தை பிரானிரே. 5.96.6
    953 வெப்பத் தின்மன மாசு விளக்கிய
    செப்பத் தாற்சிவ னென்பவர் தீவினை
    ஒப்பத் தீர்த்திடும் ஒண்கழ லாற்கல்ல
    தெப்பற் றும்மிலன் எந்தை பிரானிரே. 5.96.7
    954 திகழுஞ் சூழ்சுடர் வானொடு வைகலும்
    நிகழு மொண்பொரு ளாயின நீதியென்
    புகழு மாறு மலானுன பொன்னடி
    இகழு மாறிலன் எந்தை பிரானிரே. 5.96.8
    955 கைப்பற் றித்திரு மால்பிர மன்னுனை
    எப்பற் றியறி தற்கரி யாயருள்
    அப்பற் றல்லது மற்றடி நாயினேன்
    எப்பற் றும்மிலன் எந்தை பிரானிரே. 5.96.9
    956 எந்தை யெம்பிரான் என்றவர் மேல்மனம்
    எந்தை யெம்பிரான் என்றிறைஞ் சித்தொழு
    தெந்தை யெம்பிரான் என்றடி யேத்துவார்
    எந்தை யெம்பிரான் என்றடி சேர்வரே. 5.96.10

    திருச்சிற்றம்பலம்



Goto Main book