MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    5.97 சித்தத்தொகை - திருக்குறுந்தொகை


    திருச்சிற்றம்பலம்

    957 சிந்திப் பார்மனத் தான்சிவன் செஞ்சுடர்
    அந்தி வானிறத் தானணி யார்மதி
    முந்திச் சூடிய முக்கண்ணி னானடி
    வந்திப் பாரவர் வானுல காள்வரே. 5.97.1
    958 அண்ட மாரிரு ளூடு கடந்தும்பர்
    உண்டு போலுமோ ரொண்சுட ரச்சுடர்
    கண்டிங் காரறி வாரறி வாரெலாம்
    வெண்டிங் கட்கண்ணி வேதியன் என்பரே. 5.97.2
    959 ஆதி யாயவ னாரு மிலாதவன்
    போது சேர்புனை நீண்முடிப் புண்ணியன்
    பாதி பெண்ணுரு வாகிப் பரஞ்சுடர்ச்
    சோதி யுட்சோதி யாய்நின்ற சோதியே. 5.97.3
    960 இட்ட திட்டதோ ரேறுகந் தேறியூர்
    பட்டி துட்டங்க னாய்ப்பலி தேர்வதோர்
    கட்ட வாழ்க்கைய னாகிலும் வானவர்
    அட்ட மூர்த்தி யருளென் றடைவரே. 5.97.4
    961 ஈறில் கூறைய னாகி எரிந்தவெண்
    ணீறு பூசி நிலாமதி சூடிலும்
    வீறி லாதன செய்யினும் விண்ணவர்
    ஊற லாயரு ளாயென் றுரைப்பரே. 5.97.5
    962 உச்சி வெண்மதி சூடிலும் ஊனறாப்
    பச்சை வெண்டலை யேந்திப் பலஇலம்
    பிச்சை யேபுகு மாகிலும் வானவர்
    அச்சந் தீர்த்தரு ளாயென் றடைவரே. 5.97.6
    963 ஊரி லாயென்றொன் றாக வுரைப்பதோர்
    பேரி லாய்பிறை சூடிய பிஞ்ஞகா
    காரு லாங்கண்ட னேயுன் கழலடி
    சேர்வி லார்கட்குத் தீயவை தீயவே. 5.97.7
    964 எந்தை யேயெம் பிரானே யெனவுள்கிச்
    சிந்திப் பாரவர் தீவினை தீருமால்
    வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
    அந்த மாவளப் பாரடைந் தார்களே. 5.97.8
    965 ஏன வெண்மருப் போடென்பு பூண்டெழில்
    ஆனை யீருரி போர்த்தன லாடிலுந்
    தான வண்ணத்த னாகிலுந் தன்னையே
    வான நாடர் வணங்குவர் வைகலே. 5.97.9
    966 ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணுமாம்
    மெய்யன் மேதகு வெண்பொடிப் பூசிய
    மைகொள் கண்டத்தன் மான்மறிக் கையினான்
    பைகொள் பாம்பரை யார்த்த பரமனே. 5.97.10
    967 ஒருவ னாகிநின் றானிவ் வுலகெலாம்
    இருவ ராகிநின் றார்கட் கறிகிலான்
    அருவ ராவரை ஆர்த்தவ னார்கழல்
    பரவு வாரவர் பாவம் பறையுமே. 5.97.11
    968 ஓத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும்
    நாத னேயரு ளாயென்று நாடொறுங்
    காதல் செய்து கருதப் படுமவர்
    பாத மேத்தப் பறையுநம் பாவமே. 5.97.12
    969 வ தன்மை யவரவ ராக்கையான்
    வெவ்வ தன்மைய னென்ப தொழிமினோ
    மௌவல் நீண்மலர் மேலுறை வானொடு
    பௌவ வண்ணனு மாய்ப்பணி வார்களே. 5.97.13
    970 அக்கும் ஆமையும் பூண்டன லேந்திஇல்
    புக்குப் பல்பலி தேரும் புராணனை
    நக்கு நீர்கள் நரகம் புகேன்மினோ
    தொக்க வானவ ராற்றொழு வானையே. 5.97.14
    971 கங்கை தங்கிய செஞ்சடை மேலிளந்
    திங்கள் சூடிய தீநிற வண்ணனார்
    இங்க ணாரெழில் வானம் வணங்கவே
    அங்க ணாற்கது வாலவன் தன்மையே. 5.97.15
    972 நகர வெல்கொடி யானொடு நன்னெஞ்சே
    நுகர நீயுனைக் கொண்டுயப் போக்குறில்
    மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
    புகரில் சேவடி யேபுக லாகுமே. 5.97.16
    973 சரண மாம்படி யார்பிற ரியாவரோ
    கரணந் தீர்த்துயிர் கையி லிகழ்ந்தபின்
    மரண மெய்திய பின்னவை நீக்குவான்
    அரண மூவெயி லெய்தவ னல்லனே. 5.97.17
    974 ஞமனென் பான்நர கர்க்கு நமக்கெலாஞ்
    சிவனென் பான்செழு மான்மறிக் கையினான்
    கவனஞ் செய்யுங் கனவிடை யூர்தியான்
    தமரென் றாலுங் கெடுந்தடு மாற்றமே. 5.97.18
    975 இடப மேறியும் இல்பலி யேற்பவர்
    அடவி காதலித் தாடுவர் ஐந்தலைப்
    படவம் பாம்பரை யார்த்த பரமனைக்
    கடவி ராய்ச்சென்று கைதொழு துய்ம்மினே. 5.97.19
    976 இணர்ந்து கொன்றைபொற் றாது சொரிந்திடும்
    புணர்ந்த வாளர வம்மதி யோடுடன்
    அணைந்த அஞ்சடை யானவன் பாதமே
    உணர்ந்த உள்ளத் தவருணர் வார்களே. 5.97.20
    977 தருமந் தான்றவந் தான்றவத் தால்வருங்
    கருமந் தான்கரு மான்மறிக் கையினான்
    அருமந் தன்ன அதிர்கழல் சேர்மினோ
    சிரமஞ் சேரழல் தீவினை யாளரே. 5.97.21
    978 நமச்சி வாயவென் பாருள ரேலவர்
    தமச்ச நீங்கத் தவநெறி சார்தலால்
    அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கைய னாகிலும்
    இமைத்து நிற்பது சால அரியதே. 5.97.22
    979 பற்பல் காலம் பயிற்றிப் பரமனைச்
    சொற்பல் காலம்நின் றேத்துமின் தொல்வினை
    வெற்பில் தோன்றிய வெங்கதிர் கண்டவப்
    புற்ப னிக்கெடு மாறது போலுமே. 5.97.23
    980 மணிசெய் கண்டத்து மான்மறிக் கையினான்
    கணிசெய் வேடத்தர் ஆயவர் காப்பினாற்
    பணிகள் தாஞ்செய வல்லவர் யாவர்தம்
    பிணிசெய் யாக்கையை நீக்குவர் பேயரே. 5.97.24
    981 இயக்கர் கின்னரர் இந்திரன் தானவர்
    நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான்
    மயக்க மெய்தவன் மாலெரி யாயினான்
    வியக்குந் தன்மையி னானெம் விகிர்தனே. 5.97.25
    982 அரவ மார்த்தன லாடிய அண்ணலைப்
    பரவு வாரவர் பாவம் பறைதற்குக்
    குரவை கோத்தவ னுங்குளிர் போதின்மேல்
    கரவில் நான்முக னுங்கரி யல்லரே. 5.97.26
    983 அழலங் கையினன் அந்தரத் தோங்கிநின்
    றுழலும் மூவெயில் ஒள்ளழ லூட்டினான்
    தழலுந் தாமரை யானொடு தாவினான்
    கழலுஞ் சென்னியுங் காண்டற் கரியனே. 5.97.27
    984 இளமை கைவிட் டகறலும் மூப்பினார்
    வளமை போய்ப்பிணி யோடு வருதலால்
    உளமெ லாமொளி யாய்மதி ஆயினான்
    கிளமை யேகிளை யாக நினைப்பனே. 5.97.28
    985 தன்னிற் றன்னை அறியுந் தலைமகன்
    தன்னிற் றன்னை அறியிற் றலைப்படுந்
    தன்னிற் றன்னை அறிவில னாயிடிற்
    தன்னிற் றன்னையுஞ் சார்தற் கரியனே. 5.97.29
    986 இலங்கை மன்னனை ஈரைந்து பத்துமன்
    றலங்க லோடுட னேசெல வூன்றிய
    நலங்கொள் சேவடி நாடொறும் நாடொறும்
    வலம்கொண் டேத்துவார் வானுல காள்வரே. 5.97.30

    திருச்சிற்றம்பலம்



Goto Main book