MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    5.98 உள்ளம் - திருக்குறுந்தொகை


    திருச்சிற்றம்பலம்

    987 நீற லைத்ததோர் மேனி நிமிர்சடை
    ஆற லைக்கநின் றாடும் அமுதினைத்
    தேற லைத்தெளி யைத்தெளி வாய்த்ததோர்
    ஊற லைக்கண்டு கொண்டதெ னுள்ளமே. 5.98.1
    988 பொந்தை யைப்புக்கு நீக்கப் புகுந்திடுந்
    தந்தை யைத்தழல் போல்வதோர் மேனியைச்
    சிந்தை யைத்தெளி வைத்தெளி வாய்த்ததோர்
    எந்தை யைக்கண்டு கொண்டதெ னுள்ளமே. 5.98.2
    989 வெள்ளத் தார்விஞ்சை யார்கள் விரும்பவே
    வெள்ளத் தைச்சடை வைத்த விகிர்தனார்
    கள்ளத் தைக்கழி யம்மன மொன்றிநின்
    றுள்ளத் தில்லொளி யைக்கண்ட துள்ளமே. 5.98.3
    990 அம்மா னையமு தின்னமு தேயென்று
    தம்மா னைத்தத்து வத்தடி யார்தொழுஞ்
    செம்மா னநிறம் போல்வதோர் சிந்தையுள்
    எம்மா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே. 5.98.4
    991 கூறே றும்முமை பாகமோர் பாலராய்
    ஆறே றுஞ்சடை மேற்பிறை சூடுவர்
    பாறே றுந்தலை யேந்திப் பலஇலம்
    ஏறேறு மெந்தையைக் கண்டதெ னுள்ளமே. 5.98.5
    992 முன்னெஞ் சம்மின்றி மூர்க்கராய்ச் சாகின்றார்
    தன்னெஞ் சந்தமக் குத்தாம் இலாதவர்
    வன்னெஞ் சம்மது நீங்குதல் வல்லிரே
    என்னெஞ்சி லீசனைக் கண்டதெ னுள்ளமே. 5.98.6
    993 வென்றா னைப்புல னைந்துமென் தீவினை
    கொன்றா னைக்குணத் தாலே வணங்கிட
    நன்றா நன்மனம் வைத்திடு ஞானமாம்
    ஒன்றா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே. 5.98.7
    994 மருவி னைமட நெஞ்சம் மனம்புகுங்
    குருவி னைக்குணத் தாலே வணங்கிடுந்
    திருவி னைச்சிந்தை யுட்சிவ னாய்நின்ற
    உருவி னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே. 5.98.8
    995 தேச னைத்திரு மால்பிர மன்செயும்
    பூச னைப்புண ரிற்புணர் வாயதோர்
    நேச னைநெஞ்சி னுள்நிறை வாய்நின்ற
    ஈச னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே. 5.98.9
    996 வெறுத்தா னைம்புல னும்பிர மன்றலை
    அறுத்தா னையரக் கன்கயி லாயத்தைக்
    கறுத்தா னைக்கா லில்விர லொன்றினால்
    ஒறுத்தா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே. 5.98.10

    திருச்சிற்றம்பலம்



Goto Main book