MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    5.100 ஆதிபுராணம் - திருக்குறுந்தொகை


    திருச்சிற்றம்பலம்

    1007 வேத நாயகன் வேதியர் நாயகன்
    மாதின் நாயகன் மாதவர் நாயகன்
    ஆதி நாயகன் ஆதிரை நாயகன்
    பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே. 5.100.1
    1008 செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று
    பத்தி செய்மனப் பாறைகட் கேறுமோ
    அத்த னென்றரி யோடு பிரமனுந்
    துத்தி யஞ்செய நின்றநற் சோதியே. 5.100.2
    1009 நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
    ஆறு கோடி நாராயண ரங்ஙனே
    ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர்
    ஈறி லாதவன் ஈசன் ஒருவனே. 5.100.3
    1010 வாது செய்து மயங்கு மனத்தராய்
    ஏது சொல்லுவீ ராகிலும் ஏழைகாள்
    யாதோர் தேவ ரெனப்படு வார்க் கெல்லாம்
    மாதே வனலாற் றேவர்மற் றில்லையே. 5.100.4
    1011 கூவ லாமை குரைகட லாமையைக்
    கூவ லோடொக்கு மோகட லென்றல்போற்
    பாவ காரிகள் பார்ப்பரி தென்பராற்
    தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே. 5.100.5
    1012 பேய்வ னத்தமர் வானைப்பி ரார்த்தித்தார்க்
    கீவ னையிமை யோர்முடி தன்னடிச்
    சாய்வ னைச்சல வார்கள் தமக்குடற்
    சீவ னைச்சிவ னைச்சிந்தி யார்களே. 5.100.6
    1013 எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசன
    துருவ ருக்கம தாவ துணர்கிலார்
    அரிய யற்கரி யானை அயர்த்துப்போய்
    நரிவி ருத்தம தாகுவர் நாடரே. 5.100.7
    1014 அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
    அருக்க னாவான் அரனுரு வல்லனோ
    இருக்கு நான்மறை ஈசனை யேதொழுங்
    கருத்தி னைநினை யார்கன் மனவரே. 5.100.8
    1015 தாயி னும்நல்ல சங்கர னுக்கன்பர்
    ஆய வுள்ளத் தமுதருந் தப்பெறார்
    பேயர் பேய்முலை யுண்டுயிர் போக்கிய
    மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே. 5.100.9
    1016 அரக்கன் வல்லரட் டாங்கொழித் தாரருள்
    பெருக்கச் செய்த பிரான்பெருந் தன்மையை
    அருத்தி செய்தறி யப்பெறு கின்றிலர்
    கருத்தி லாக்கய வக்கணத் தோர்களே. 5.100.10
    திருச்சிற்றம்பலம்
    திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்

Goto Main book