MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    7.12 திருநாட்டுத்தொகை


    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    112 வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்
    கூழை ஏறுகந் தானிடங் கொண்டதுங் கோவலூர்
    தாழை யூர்தக டூர்தக்க ளூர்தரு மபுரம்
    வாழை காய்க்கும் வளர்மரு கல்நாட்டு மருகலே. 7.12.1
    113 அண்டத் தண்டத்தின் அப்புறத் தாடும் அமுதனூர்
    தண்டந் தோட்டந்தண் டங்குறை தண்டலை யாலங்காடு
    கண்டல் முண்டல்கள் சூழ்கழிப் பாலை கடற்கரை
    கொண்டல் நாட்டுக்கொண் டல்குறுக் கைநாட்டுக் குறுக்கையே. 7.12.2
    114 மூல னூர்முத லாயமுக் கண்ணன் முதல்வனூர்
    நால னூர்நரை ஏறுகந் தேறிய நம்பனூர்
    கோல நீற்றன்குற் றாலங் குரங்கணின் முட்டமும்
    வேல னூர்வெற்றி யூர்வெண்ணிக் கூற்றத்து வெண்ணியே. 7.12.3
    115 தேங்கூ ருந்திருச் சிற்றம் பலமுஞ் சிராப்பள்ளி
    பாங்கூர் எங்கள் பிரானுறை யுங்கடம் பந்துறை
    பூங்கூ ரும்பர மன்பரஞ் சோதி பயிலுமூர்
    நாங்கூர் நாட்டுநாங் கூர்நறை யூர்நாட்டு நறையூரே. 7.12.4
    116 குழலை வென்ற மொழிமட வாளையோர் கூறனாம்
    மழலை யேற்று மணாளன் இடந்தட மால்வரைக்
    கிழவன் கீழை வழிப்பழை யாறு கிழையமும்
    மிழலை நாட்டு மிழலைவெண் ணிநாட்டு மிழலையே. 7.12.5
    117 தென்னூர் கைம்மைத் திருச்சுழி யல்திருக் கானப்பேர்
    பன்னூர் புக்குறை யும்பர மர்க்கிடம் பாய்நலம்
    என்னூர் எங்கள் பிரானுறை யுந்திருத் தேவனூர்
    பொன்னூர் நாட்டுப்பொன் னூர்புரி சைநாட்டுப் புரிசையே. 7.12.6
    118 ஈழ நாட்டுமா தோட்டந்தென் னாட்டிரா மேச்சுரம்
    சோழ நாட்டுத் துருத்திநெய்த் தானந் திருமலை
    ஆழி யூரன நாட்டுக்கெல் லாம்அணி யாகிய
    கீழை யில்லர னார்க்கிடங் கிள்ளி குடியதே. 7.12.7
    119 நாளும் நன்னிலந் தென்பனை யூர்வட கஞ்சனூர்
    நீள நீள்சடை யான்நெல்லிக் காவு நெடுங்களங்
    காள கண்டன் உறையும் கடைமுடி கண்டியூர்
    வேளார் நாட்டுவே ளூர்விளத் தூர்நாட்டு விளத்தூரே. 7.12.8
    120 தழலும் மேனியன் தையலோர் பாகம மர்ந்தவன்
    தொழலுந் தொல்வினை தீர்க்கின்ற சோதிசோற் றுத்துறை
    கழலுங் கோவை யுடையவன் காதலிக் கும்மிடம்
    பழனம் பாம்பணி பாம்புரந் தஞ்சைதஞ் சாக்கையே. 7.12.9
    121 மைகொள் கண்டனெண் டோ ளன்முக் கண்ணன் வலஞ்சுழி
    பைகொள் வாளர வாட்டித் திரியும் பரமனூர்
    செய்யில் வாளைகள் பாய்ந்துக ளுந்திருப் புன்கூர்நன்
    றையன் மேய பொழிலணி ஆவடு துறையதே. 7.12.10
    122 பேணி நாடத னிற்றிரி யும்பெரு மான்றனை
    ஆணை யாவடி யார்கள் தொழப்படும் ஆதியை
    நாணி ஊரன் வனப்பகை யப்பன்வன் றொண்டன்சொல்
    பாணி யாலிவை யேத்துவார் சேர்பர லோகமே. 7.12.11

    திருச்சிற்றம்பலம்


Goto Main book