MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    7.33. நமக்கடிகளாகிய - அடிகள்


    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    330
    பாறுதாங்கிய காடரோபடு
    தலையரோமலைப் பாவையோர்
    கூறுதாங்கிய குழகரோகுழைக்
    காதரோகுறுங் கோட்டிள
    ஏறுதாங்கிய கொடியரோசுடு
    பொடியரோஇலங் கும்பிறை
    ஆறுதாங்கிய சடையரோநமக்
    கடிகளாகிய அடிகளே. 7.33.1
    331 இட்டிதாகவந் துரைமினோநுமக்
    கிசையுமாநினைந் தேத்துவீர்
    கட்டிவாழ்வது நாகமோசடை
    மேலும்நாறு கரந்தையோ
    பட்டியேறுகந் தேறரோபடு
    வெண்டலைப்பலி கொண்டுவந்
    தட்டியாளவுங் கிற்பரோநமக்
    கடிகளாகிய அடிகளே. 7.33.2
    332 ஒன்றினீர்கள்வந் துரைமினோநுமக்
    கிசையுமாநினைந் தேத்துவீர்
    குன்றிபோல்வதோ ருருவரோகுறிப்
    பாகிநீறுகொண் டணிவரோ
    இன்றியேயிலர் ஆவரோஅன்றி
    உடையராயிலர் ஆவரோ
    அன்றியேமிக அறவரோநமக்
    கடிகளாகிய அடிகளே. 7.33.3
    333 தேனையாடுமுக் கண்ணரோமிகச்
    செய்யரோவெள்ளை நீற்றரோ
    பானெய்ஆடலும் பயில்வரோதமைப்
    பற்றினார்கட்கு நல்லரோ
    மானைமேவிய கண்ணினாள்மலை
    மங்கைநங்கையை அஞ்சவோர்
    ஆனையீருரி போர்ப்பரோநமக்
    கடிகளாகிய அடிகளே. 7.33.4
    334 கோணல்மாமதி சூடரோகொடு
    கொட்டிகாலர் கழலரோ
    வீணைதானவர் கருவியோ
    விடையேறுவேத முதல்வரோ
    நாணதாகவோர் நாகங்கொண்டரைக்
    கார்ப்பரோநல மார்தர
    ஆணையாகநம் மடிகளோநமக்
    கடிகளாகிய அடிகளே. 7.33.5
    335 வந்துசொல்லுமின் மூடனேனுக்கு
    வல்லவாநினைந் தேத்துவீர்
    வந்தசாயினை அறிவரோதம்மை
    வாழ்த்தினார்கட்கு நல்லரோ
    புந்தியாலுரை கொள்வரோஅன்றிப்
    பொய்யில்மெய்யுரைத் தாள்வரோ
    அன்றியேமிக அறவரோநமக்
    கடிகளாகிய அடிகளே. 7.33.6
    336 மெய்யென்சொல்லுமின் நமரங்காளுமக்
    கிசையுமாநினைந் தேத்துவீர்
    கையிற்சூலம துடையரோகரி
    காடரோகறைக் கண்டரோ
    வெய்யபாம்பரை ஆர்ப்பரோவிடை
    ஏறரோகடை தோறுஞ்சென்
    றையங்கொள்ளுமவ் வடிகளோநமக்
    கடிகளாகிய அடிகளே. 7.33.7
    337 நீடுவாழ்பதி உடையரோஅயன்
    நெடியமாலுக்கு நெடியரோ
    பாடுவாரையும் உடையரோதமைப்
    பற்றினார்கட்கு நல்லரோ
    காடுதானரங் காகவேகைகள்
    எட்டினோடில யம்பட
    ஆடுவாரெனப் படுவரோநமக்
    கடிகளாகிய அடிகளே. 7.33.8
    338 நமணநந்தியுங் கருமவீரனுந்
    தருமசேனனு மென்றிவர்
    குமணமாமலைக் குன்றுபோனின்று
    தங்கள்கூறையொன் றின்றியே
    ஞமணஞாஞண ஞாணஞோணமென்
    றோதியாரையு நாணிலா
    அமணராற்பழிப் புடையரோநமக்
    கடிகளாகிய அடிகளே. 7.33.9
    339 படிசெய்நீர்மையிற் பத்தர்காள்பணிந்
    தேத்தினேன்பணி யீரருள்
    வடிவிலான்றிரு நாவலூரன்
    வனப்பகையப்பன் வன்றொண்டன்
    செடியனாகிலுந் தீயனாகிலுந்
    தம்மையேமனஞ் சிந்திக்கும்
    அடியனூரனை ஆள்வரோநமக்
    கடிகளாகிய அடிகளே. 7.33.10

    திருச்சிற்றம்பலம்


Goto Main book