MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    7.44 முடிப்பதுகங்கை


    பண் - கொல்லிக்கௌவாணம்
    திருச்சிற்றம்பலம்

    446 முடிப்பது கங்கையுந் திங்களுஞ் செற்றது மூவெயில்
    நொடிப்பது மாத்திரை நீறெ ழக்கணை நூறினார்
    கடிப்பது மேறுமென் றஞ்சு வன்றிருக் கைகளாற்
    பிடிப்பது பாம்பன்றி இல்லை யோவெம் பிரானுக்கே. 7.44.1
    447 தூறன்றி ஆடரங் கில்லை யோசுட லைப்பொடி
    நீறன்றிச் சாந்தமற் றில்லை யோஇம வான்மகள்
    கூறன்றிக் கூறுவ தில்லை யோகொல்லைச் சில்லைவெள்
    ளேறன்றி ஏறுவ தில்லை யோவெம் பிரானுக்கே. 7.44.2
    448 தட்டெனுந் தட்டெனுந் தொண்டர் காள்தடு மாற்றத்தை
    ஒட்டெனும் ஒட்டெனும் மாநி லத்துயிர் கோறலைச்
    சிட்டன் திரிபுரஞ் சுட்ட தேவர்கள் தேவனை
    வெட்டெனப் பேசன்மின் தொண்டர் காளெம் பிரானையே. 7.44.3
    449 நரிதலை கவ்வநின் றோரி கூப்பிட நள்ளிருள்
    எரிதலைப் பேய்புடை சூழ ஆரிருள் காட்டிடைச்
    சிரிதலை மாலை சடைக்க ணிந்தவெஞ் செல்வனைப்
    பிரிதலைப் பேசன்மின் தொண்டர் காளெம் பிரானையே. 7.44.4
    450 வேயன தோளி மலைம களைவி ரும்பிய
    மாயமில் மாமலை நாட னாகிய மாண்பனை
    ஆயன சொல்லிநின் றார்கள் அல்லல் அறுக்கிலும்
    பேயனே பித்தனே என்ப ராலெம் பிரானையே. 7.44.5
    451 இறைவனென் றெம்பெரு மானை வானவ ரேத்தப்போய்த்
    துறையொன்றித் தூமல ரிட்ட டியிணை போற்றுவார்
    மறையன்றிப் பாடுவ தில்லை யோமல்கு வானிளம்
    பிறையன்றிச் சூடுவ தில்லை யோவெம் பிரானுக்கே. 7.44.6
    452 தாருந்தண் கொன்றையுங் கூவி ளந்தனி மத்தமும்
    ஆரும் அளவறி யாத ஆதியும் அந்தமும்
    ஊருமொன் றில்லை உலகெ லாமுகப் பார்தொழப்
    பேருமோ ராயிரம் என்ப ராலெம் பிரானுக்கே. 7.44.7
    453 அரியொடு பூமிசை யானும் ஆதியும் அறிகிலார்
    வரிதரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும்
    புரிதரு புன்சடை வைத்த எம்புனி தற்கினி
    எரியன்றி அங்கைக்கொன் றில்லை யோவெம் பிரானுக்கே. 7.44.8
    454 கரிய மனச்சமண் காடி யாடு கழுக்களால்
    எரிய வசவுணுந் தன்மை யோஇம வான்மகள்
    பெரிய மனந்தடு மாற வேண்டிப்பெம் மான்மதக்
    கரியின் உரியல்ல தில்லை யோவெம் பிரானுக்கே. 7.44.9
    455 காய்சின மால்விடை மாணிக் கத்தெங் கறைக்கண்டத்
    தீசனை ஊரனெட் டோ டி ரண்டுவி ரும்பிய
    ஆயின சீர்ப்பகை ஞானியப் பன்னடித் தொண்டன்றான்
    ஏசின பேசுமின் தொண்டர் காளெம் பிரானையே. 7.44.10

    திருச்சிற்றம்பலம்


Goto Main book