MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    7.63 நம்பி என்ற திருப்பதிகம்


    பண் - தக்கேசி
    திருச்சிற்றம்பலம்

    645 மெய்யைமுற் றப்பொடிப் பூசியோர் நம்பி
    வேதம்நான் கும்விரித் தோதியோர் நம்பி
    கையிலோர் வெண்மழு ஏந்தியோர் நம்பி
    கண்ணு மூன்றுடை யாயொரு நம்பி
    செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி
    திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால்
    எய்தநம் பியென்னை ஆளுடை நம்பி
    எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 7.63.1
    646 திங்கள் நம்பிமுடி மேலடி யார்பால்
    சிறந்தநம் பிபிறந் தஉயிர்க் கெல்லாம்
    அங்கண் நம்பியருள் மால்விசும் பாளும்
    அமரர் நம்பிகும ரன்முதல் தேவர்
    தங்கள் நம்பிதவத் துக்கொரு நம்பி
    தாதை என்றுன் சரண்பணிந் தேத்தும்
    எங்கள் நம்பிஎன்னை ஆளுடை நம்பி
    எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 7.63.2
    647 வருந்த அன்றுமத யானை உரித்த
    வழக்கு நம்பிமுழக் குங்கடல் நஞ்சம்
    அருந்தும் நம்பிஅம ரர்க்கமு தீந்த
    அருளென் நம்பிபொரு ளால்வரு நட்டம்
    புரிந்த நம்பிபுரி நூலுடை நம்பி
    பொழுதும் விண்ணும்முழு தும்பல வாகி
    இருந்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி
    எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 7.63.3
    648 ஊறு நம்பிஅமு தாஉயிர்க் கெல்லாம்
    உரிய நம்பிதெரி யம்மறை அங்கங்
    கூறு நம்பிமுனி வர்க்கருங் கூற்றைக்
    குமைத்த நம்பிகுமை யாப்புலன் ஐந்துஞ்
    சீறு நம்பிதிரு வெள்ளடை நம்பி
    செங்கண்வெள் ளைச்செழுங் கோட்டெரு தென்றும்
    ஏறு நம்பிஎன்னை ஆளுடை நம்பி
    எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 7.63.4
    649 குற்ற நம்பிகுறு காரெயில் மூன்றைக்
    குலைத்த நம்பிசிலை யாவரை கையிற்
    பற்று நம்பிபர மானந்த வெள்ளம்
    பணிக்கும் நம்பிஎனப் பாடுத லல்லால்
    மற்று நம்பிஉனக் கென்செய வல்லேன்
    மதியி லேன்படு வெந்துயர் எல்லாம்
    எற்று நம்பிஎன்னை ஆளுடை நம்பி
    எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 7.63.5
    650 அரித்த நம்பிஅடி கைதொழு வார்நோய்
    ஆண்ட நம்பிமுன்னை ஈண்டுல கங்கள்
    தெரித்த நம்பிஒரு சேவுடை நம்பி
    சில்பலிக் கென்றகந் தோறுமெய் வேடந்
    தரித்த நம்பிசம யங்களின் நம்பி
    தக்கன்றன் வேள்விபுக் கன்றிமை யோரை
    இரித்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி
    எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 7.63.6
    651 பின்னை நம்பும்புயத் தான்நெடு மாலும்
    பிரமனும் என்றிவர் நாடியுங் காணா
    உன்னை நம்பிஒரு வர்க்கெய்த லாமே
    உலகு நம்பிஉரை செய்யும தல்லால்
    முன்னைநம் பிபின்னும் வார்சடை நம்பி
    முழுதிவை இத்தனை யுந்தொகுத் தாண்ட
    தென்னை நம்பிஎம் பிரானாய நம்பி
    எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 7.63.7
    652 சொல்லை நம்பிபொரு ளாய்நின்ற நம்பி
    தோற்றம் ஈறுமுத லாகிய நம்பி
    வல்லை நம்பிஅடி யார்க்கருள் செய்ய
    வருந்தி நம்பிஉனக் காட்செய கில்லார்
    அல்லல் நம்பிபடு கின்றதென் நாடி
    அணங்கொரு பாகம்வைத் தெண்கணம் போற்ற
    இல்ல நம்பியிடு பிச்சைகொள் நம்பி
    எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 7.63.8
    653 காண்டு நம்பிகழற் சேவடி என்றுங்
    கலந்துனைக் காதலித் தாட்செய்கிற் பாரை
    ஆண்டு நம்பியவர் முன்கதி சேர
    அருளும் நம்பிகுரு மாப்பிறை பாம்பைத்
    தீண்டுநம் பிசென்னி யிற்கன்னி தங்கத்
    திருத்து நம்பிபொய்ச் சமண்பொரு ளாகி
    ஈண்டு நம்பிஇமை யோர்தொழு நம்பி
    எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 7.63.9
    654 கரக்கும் நம்பிகசி யாதவர் தம்மை
    கசிந்தவர்க் கிம்மையோ டம்மையில் இன்பம்
    பெருக்கும் நம்பி பெருகக் கருத்தா..
    ...... ...... ...... ......
    ...... ...... ...... ...... 7.63.10

    இச்செய்யுளின் பிற்பகுதி சிதைந்து போயிற்று.
    திருச்சிற்றம்பலம்


Goto Main book