4.50 திருக்குறுக்கை - திருநேரிசை
486 நெடியமால் பிரம னோடு
நீரெனும் பிலயங் கொள்ள
அடியொடு முடியுங் காணார்
அருச்சுனற் கம்பும் வில்லுந்
துடியுடை வேட ராகித்
தூயமந் திரங்கள் சொல்லிக்
கொடிநெடுந் தேர்கொ டுத்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே. 4.50.1
487 ஆத்தமாம் அயனு மாலும்
அன்றிமற் றொழிந்த தேவர்
சோத்தமெம் பெருமான் என்று
தொழுதுதோத் திரங்கள் சொல்லத்
தீர்த்தமாம் அட்ட மிமுன்
சீருடை ஏழு நாளுங்
கூத்தராய் வீதி போந்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே. 4.50.2
இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன. 4.50.3-10
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்
நான்காம் திருமுறை முதற் பகுதி முற்றும்.
திருச்சிற்றம்பலம்
Goto Main book