MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.45 திருப்பழையனூர்-திரு ஆலங்காடு
    பண் - தக்கராகம்

    481 துஞ்ச வருவாருந் தொழுவிப்பாரும் வழுவிப்போய்
    நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப்பாரும் முனைநட்பாய்
    வஞ்சப் படுத்தொருத்தி வாழ்நாள்கொள்ளும் வகைகேட்
    டஞ்சும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.1
    482 கேடும் பிறவியும் ஆக்கினாருங் கேடிலா
    வீடு மாநெறி விளம்பினாரெம் விகிர்தனார்
    காடுஞ் சுடலையும் கைக்கொண்டெல்லிக் கணப்பேயோ
    டாடும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.2
    483 கந்தங் கமழ்கொன்றைக் கண்ணிசூடி கனலாடி
    வெந்த பொடிநீற்றை விளங்கப்பூசும் விகிர்தனார்
    கொந்தண் பொழிற்சோலை யரவின்தோன்றிக் கோடல்பூத்
    தந்தண் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.3
    484 பால மதிசென்னி படரச்சூடி பழியோராக்
    கால னுயிர்செற்ற காலனாய கருத்தனார்
    கோலம் பொழிற்சோலைப் பெடையோடாடி மடமஞ்ஞை
    ஆலும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.4
    485 ஈர்க்கும் புனல்சூடி இளவெண்டிங்கள் முதிரவே
    பார்க்கு மரவம்பூண் டாடிவேடம் பயின்றாருங்
    கார்க்கொள் கொடிமுல்லை குருந்தமேறிக் கருந்தேன்மொய்த்
    தார்க்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.5
    486 பறையுஞ் சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே
    மறையும் பலபாடி மயானத்துறையும் மைந்தனார்
    பிறையும் பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண்
    டறையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.6
    487 நுணங்கு மறைபாடி யாடிவேடம் பயின்றாரும்
    இணங்கு மலைமகளோ டிருகூறொன்றாய் இசைந்தாரும்
    வணங்குஞ் சிறுத்தொண்டர் வைகலேத்தும் வாழ்த்துங்கேட்
    டணங்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.7
    488 கணையும் வரிசிலையும் எரியுங்கூடிக் கவர்ந்துண்ண
    இணையில் எயின்மூன்றும் எரித்திட்டாரெம் இறைவனார்
    பிணையுஞ் சிறுமறியுங் கலையுமெல்லாங் கங்குல்சேர்ந்
    தணையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.8
    489 489
    கவிழ மலைதரளக் கடகக்கையால் எடுத்தான்றோள்
    பவழ நுனைவிரலாற் பையவூன்றிப் பரிந்தாரும்
    தவழுங் கொடிமுல்லை புறவஞ்சேர நறவம்பூத்
    தவிழும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.9
    490 பகலும் இரவுஞ்சேர் பண்பினாரும் நண்போரா
    திகலும் இருவர்க்கும் எரியாய்த்தோன்றி நிமிர்ந்தாரும்
    புகலும் வழிபாடு வல்லார்க்கென்றுந் தீயபோய்
    அகலும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.10
    491 போழம் பலபேசிப் போதுசாற்றித் திரிவாரும்
    வேழம் வருமளவும் வெயிலேதுற்றித் திரிவாரும்
    கேழல் வினைபோகக் கேட்பிப்பாரும் கேடிலா
    ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.11
    492 சாந்தங் கமழ்மறுகிற் சண்பைஞான சம்பந்தன்
    ஆந்தண் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளை
    வேந்த னருளாலே விரித்தபாடல் இவைவல்லார்
    சேர்ந்த விடமெல்லாந் தீர்த்தமாகச் சேர்வாரே. 1.45.12

    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுரர், தேவியார் - வண்டார்குழலியம்மை.

    திருச்சிற்றம்பலம்