MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.46 திரு அதிகைவீரட்டானம்
    பண் - தக்கராகம்

    493 குண்டைக் குறட்பூதங் குழும அனலேந்திக்
    கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம்
    வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை
    விண்ட தொடையலா னாடும்வீரட் டானத்தே. 1.46.1
    493 அரும்புங் குரும்பையு மலைத்த மென்கொங்கைக்
    கரும்பின் மொழியாளோ டுடன்கை அனல்வீசிச்
    சுரும்புண் விரிகொன்றைச் சுடர்பொற் சடைதாழ
    விரும்பு மதிகையு ளாடும்வீரட் டானத்தே. 1.46.2
    494 ஆடல் அழல்நாக மரைக்கிட் டசைத்தாடப்
    பாடல் மறைவல்லான் படுதம்பலி பெயர்வான்
    மாட முகட்டின்மேல் மதிதோய் அதிகையுள்
    வேடம் பலவல்லா னாடும்வீரட் டானத்தே. 1.46.3
    496 எண்ணார் எயிலெய்தான் இறைவன் அனலேந்தி
    மண்ணார் முழவதிர முதிரா மதிசூடிப்
    பண்ணார் மறைபாடப் பரமன் அதிகையுள்
    விண்ணோர் பரவநின் றாடும்வீரட் டானத்தே. 1.46.4
    497 கரிபுன் புறமாய கழிந்தார் இடுகாட்டில்
    திருநின் றொருகையால் திருவாம் அதிகையுள்
    எரியேந் தியபெருமான் எரிபுன் சடைதாழ
    விரியும் புனல்சூடி யாடும்வீரட் டானத்தே. 1.46.5
    498 துளங்குஞ் சுடரங்கைத் துதைய விளையாடி
    இளங்கொம் பனசாயல் உமையோ டிசைபாடி
    வளங்கொள் புனல்சூழ்ந்த வயலா ரதிகையுள்
    விளங்கும் பிறைசூடி யாடும்வீரட் டானத்தே. 1.46.6
    499 பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி
    பூதம் புடைசூழப் புலித்தோ லுடையாகக்
    கீதம் உமைபாடக் கெடில வடபக்கம்
    வேத முதல்வன்நின் றாடும்வீரட் டானத்தே. 1.46.7
    500 கல்லார் வரையரக்கன் தடந்தோள் கவின்வாட
    ஒல்லை யடர்த்தவனுக் கருள்செய் ததிகையுள்
    பல்லார் பகுவாய நகுவெண் டலைசூடி
    வில்லால் எயிலெய்தான் ஆடும்வீரட் டானத்தே. 1.46.8
    501 நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார்
    பொடியாடு மார்பானைப் புரிநூ லுடையானைக்
    கடியார் கழுநீலம் மலரு மதிகையுள்
    வெடியார் தலையேந்தி யாடும்வீரட் டானத்தே. 1.46.9
    511 அரையோ டலர்பிண்டி மருவிக் குண்டிகை
    சுரையோ டுடனேந்தி உடைவிட் டுழல்வார்கள்
    உரையோ டுரையொவ்வா துமையோ டுடனாகி
    விரைதோ யலர்தாரான் ஆடும்வீரட் டானத்தே. 1.46.10
    512 ஞாழல் கமழ்காழி யுள்ஞான சம்பந்தன்
    வேழம் பொருதெண்ணீர் அதிகைவீரட் டானத்துச்
    சூழுங் கழலானைச் சொன்ன தமிழ்மாலை
    வாழுந் துணையாக நினைவார் வினையிலாரே. 1.46.11

    இத்தலம் நடுநாட்டில் கெடிலநதிக்கு வடபாலுள்ளது.
    சுவாமிபெயர் - அதிகைநாதர், வீரட்டானேசுவரர்;
    தேவியார் - திருவதிகைநாயகி.

    திருச்சிற்றம்பலம்