MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.48 திருச்சேய்ஞலூர்
    பண் - பழந்தக்கராகம்

    515 நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
    மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை
    ஆலடைந்த நீழல்மேவி யருமறை சொன்னதென்னே
    சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே. 1.48.1
    516 நீறடைந்த மேனியின்கண் நேரிழையா ளொருபால்
    கூறடைந்த கொள்கையன்றிக் கோலவளர் சடைமேல்
    ஆறடைந்த திங்கள்சூடி யரவம் அணிந்ததென்னே
    சேறடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே. 1.48.2
    517 ஊனடைந்த வெண்டலையி னோடுபலி திரிந்து
    கானடைந்த பேய்களோடு பூதங் கலந்துடனே
    மானடைந்த நோக்கிகாண மகிழ்ந்தெரி யாடலென்னே
    தேனடைந்த சோலைமல்கு சேய்ஞலூர் மேயவனே. 1.48.3
    518 வீணடைந்த மும்மதிலும் வில்மலை யாவரவின்
    நாணடைந்த வெஞ்சரத்தால் நல்லெரி யூட்டலென்னே
    பாணடைந்த வண்டுபாடும் பைம்பொழில் சூழ்ந்தழகார்
    சேணடைந்த மாடம்மல்கு சேய்ஞலூர் மேயவனே. 1.48.4
    519 பேயடைந்த காடிடமாப் பேணுவ தன்றியும்போய்
    வேயடைந்த தோளியஞ்ச வேழம் உரித்ததென்னே
    வாயடைந்த நான்மறையா றங்கமோ டைவேள்வித்
    தீயடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே. 1.48.5
    520 காடடைந்த ஏனமொன்றின் காரண மாகிவந்து
    வேடடைந்த வேடனாகி விசயனொ டெய்ததென்னே
    கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்க ணாற்கருள்செய்
    சேடடைந்த செல்வர்வாழுஞ் சேய்ஞலூர் மேயவனே. 1.48.6
    521 பீரடைந்த பாலதாட்டப் பேணா தவன்தாதை
    வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்
    தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே
    சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே. 1.48.7
    522 மாவடைந்த தேரரக்கன் வலிதொலை வித்தவன்றன்
    நாவடைந்த பாடல்கேட்டு நயந்தருள் செய்ததென்னே
    பூவடைந்த நான்முகன்போற் பூசுரர் போற்றிசெய்யுஞ்
    சேவடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே. 1.48.8
    523 காரடைந்த வண்ணனோடு கனக மனையானும்
    பாரிடந்தும் விண்பறந்தும் பாத முடிகாணார்
    சீரடைந்து வந்துபோற்றச் சென்றருள் செய்ததென்னே
    தேரடைந்த மாமறுகிற் சேய்ஞலூர் மேயவனே. 1.48.9
    524 மாசடைந்த மேனியாரும் மனந்திரி யாதகஞ்சி
    நேசடைந்த ஊணினாரும் நேசமி லாததென்னே
    வீசடைந்த தோகையாட விரைகமழும் பொழில்வாய்த்
    தேசடைந்த வண்டுபாடுஞ் சேய்ஞலூர் மேயவனே. 1.48.10
    525 சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன சீர்பரவித்
    தோயடைந்த தண்வயல்சூழ் தோணி புரத்தலைவன்
    சாயடைந்த ஞானமல்கு சம்பந்தன் இன்னுரைகள்
    வாயடைந்து பாடவல்லார் வானுல காள்பவரே. 1.48.11

    சோழநாட்டில் சுப்பிரமணியசுவாமியினா லுண்டான தலம்.
    சுவாமிபெயர் - சத்தகிரீசுவரர், தேவியார் - சகிதேவிநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்