MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.50 திருவலிவலம்
    பண் - பழந்தக்கராகம்

    537 ஒல்லையாறி உள்ளமொன்றிக் கள்ளம்ஒழிந் துவெய்ய
    சொல்லையாறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி
    நல்லவாறே உன்றன்நாமம் நாவில்நவின் றேத்த
    வல்லவாறே வந்துநல்காய் வலிவலமே யவனே. 1.50.1
    538 இயங்குகின்ற இரவிதிங்கள் மற்றுநற் றேவரெல்லாம்
    பயங்களாலே பற்றிநின்பால் சித்தந்தெளி கின்றிலர்
    தயங்குசோதி சாமவேதா காமனைக்காய்ந் தவனே
    மயங்குகின்றேன் வந்துநல்காய் வலிவல மேயவனே. 1.50.2
    539 பெண்டிர்மக்கள் சுற்றமென்னும் பேதைப் பெருங்கடலை
    விண்டுபண்டே வாழமாட்டேன் வேதனை நோய்நலியக்
    கண்டுகண்டே யுன்றன்நாமங் காதலிக் கின்றதுள்ளம்
    வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை வலிவல மேயவனே. 1.50.3
    540 மெய்யராகிப் பொய்யைநீக்கி வேதனை யைத்துறந்து
    செய்யரானார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே
    நைவன்நாயேன் உன்றன்நாமம் நாளும் நவிற்றுகின்றேன்
    வையம்முன்னே வந்துநல்காய் வலிவல மேயவனே. 1.50.4
    541 துஞ்சும்போதுந் துற்றும்போதுஞ் சொல்லுவ னுன்றிறமே
    தஞ்சமில்லாத் தேவர்வந்துன் தாளிணைக் கீழ்ப்பணிய
    நஞ்சையுண்டாய்க் கென்செய்கேனோ நாளும் நினைந்தடியேன்
    வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே. 1.50.5
    542 புரிசடையாய் புண்ணியனே நண்ணலார் மூவெயிலும்
    எரியஎய்தாய் எம்பெருமான் என்றிமை யோர்பரவும்
    கரியுரியாய் காலகாலா நீலமணி மிடற்று
    வரியரவா வந்துநல்காய் வலிவல மேயவனே. 1.50.6
    543 தாயுநீயே தந்தைநீயே சங்கர னேயடியேன்
    ஆயுநின்பால் அன்புசெய்வான் ஆதரிக் கின்றதுள்ளம்
    ஆயமாய காயந்தன்னுள் ஐவர்நின் றொன்றலொட்டார்
    மாயமேயென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே. 1.50.7
    544 நீரொடுங்குஞ் செஞ்சடையாய் நின்னுடைய பொன்மலையை
    வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற வேந்தனி ராவணனைத்
    தேரொடும்போய் வீழ்ந்தலறத் திருவிர லால்அடர்த்த
    வாரொடுங்கும் கொங்கைபங்கா வலிவல மேயவனே. 1.50.8
    545 ஆதியாய நான்முகனு மாலு மறிவரிய
    சோதியானே நீதியில்லேன் சொல்லுவன் நின்றிறமே
    ஓதிநாளும் உன்னையேத்தும் என்னை வினைஅவலம்
    வாதியாமே வந்துநல்காய் வலிவல மேயவனே. 1.50.9
    546 பொதியிலானே பூவணத்தாய் பொன்திக ழுங்கயிலைப்
    பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவி டாதவனே
    விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கிய ரென்றிவர்கள்
    மதியிலாதார் என்செய்வாரோ வலிவல மேயவனே.

    ()பொதியில் என்பது பொதிகைமலை. அது வைப்புத்தலங்களிலொன்று. 1.50.10
    547 வன்னிகொன்றை மத்தஞ்சூடும் வலிவல மேயவனைப்
    பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம் பந்தன்சொன்ன
    பன்னுபாடல் பத்தும்வல்லார் மெய்த்தவத் தோர்விரும்பும்
    மன்னுசோதி ஈசனோடே மன்னி யிருப்பாரே. 1.50.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மனத்துணைநாதர், தேவியார் - வாளையங்கண்ணியம்மை.

    திருச்சிற்றம்பலம்