MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.53 திருமுதுகுன்றம்
    பண் - பழந்தக்கராகம்

    570 தேவராயும் அசுரராயுஞ் சித்தர் செழுமறைசேர்
    நாவராயும் நண்ணுபாரும் விண்ணெரி கால்நீரும்
    மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசனென்னும்
    மூவராய முதலொருவன் மேயது முதுகுன்றே. 1.53.1
    571 பற்றுமாகி வானுளோர்க்குப் பல்கதி ரோன்மதிபார்
    எற்றுநீர்தீக் காலுமேலை விண்ணிய மானனொடு
    மற்றுமாதோர் பல்லுயிராய் மாலய னும்மறைகள்
    முற்றுமாகி வேறுமானான் மேயது முதுகுன்றே. 1.53.2
    572 வாரிமாகம் வைகுதிங்கள் வாளர வஞ்சூடி
    நாரிபாகம் நயந்துபூமேல் நான்முகன் றன்றலையில்
    சீரிதாகப் பலிகொள்செல்வன் செற்றலுந் தோன்றியதோர்
    மூரிநாகத் துரிவைபோர்த்தான் மேயது முதுகுன்றே. 1.53.3
    573 பாடுவாருக் கருளுமெந்தை பனிமுது பௌவமுந்நீர்
    நீடுபாரும் முழுதுமோடி அண்டர் நிலைகெடலும்
    நாடுதானும் ஊடுமோடி ஞாலமும் நான்முகனும்
    ஊடுகாண மூடும்வெள்ளத் துயர்ந்தது முதுகுன்றே. 1.53.4
    574 வழங்குதிங்கள் வன்னிமத்தம் மாசுணம் மீசணவிச்
    செழுங்கல்வேந்தன் செல்விகாணத் தேவர் திசைவணங்கத்
    தழங்குமொந்தை தக்கைமிக்க பேய்க்கணம் பூதஞ்சூழ
    முழங்குசெந்தீ யேந்தியாடி மேயது முதுகுன்றே. 1.53.5
    575 சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கள் தொல்லரா நல்லிதழி
    சழிந்தசென்னி சைவவேடந் தானினைத் தைம்புலனும்
    அழிந்தசிந்தை அந்தணாளர்க் கறம்பொரு ளின்பம்வீடு
    மொழிந்தவாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே. 1.53.5
    இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.53.6
    576 மயங்குமாயம் வல்லராகி வானி னொடுநீரும்
    இயங்குவோருக் கிறைவனாய இராவணன் தோள்நெரித்த
    புயங்கராக மாநடத்தன் புணர்முலை மாதுமையாள்
    முயங்குமார்பன் முனிவரேத்த மேயது முதுகுன்றே. 1.53.8
    577 ஞாலமுண்ட மாலுமற்றை நான்முக னும்மறியாக்
    கோலமண்டர் சிந்தைகொள்ளா ராயினுங் கொய்மலரால்
    ஏலஇண்டை கட்டிநாமம் இசையஎப் போதுமேத்தும்
    மூலமுண்ட நீற்றர்வாயான் மேயது முதுகுன்றே. 1.53.9
    578 உறிகொள்கையர் சீவரத்தர் உண்டுழல் மிண்டர்சொல்லை
    நெறிகளென்ன நினைவுறாதே நித்தலுங் கைதொழுமின்
    மறிகொள்கையன் வங்கமுந்நீர் பொங்கு விடத்தையுண்ட
    முறிகொள்மேனி மங்கைபங்கன் மேயது முதுகுன்றே. 1.53.10
    579 மொய்த்துவானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை
    பித்தர்வேடம் பெருமையென்னும் பிரமபுரத் தலைவன்
    .. .. .. .. .. .. .. ..
    .. .. .. .. .. .. .. .. 1.53.11
    () 11-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் சிதைந்து போயின.

    திருச்சிற்றம்பலம்