MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.57 திருவேற்காடு
    பண் - பழந்தக்கராகம்

    612 ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி
    வெள்ளி யானுறை வேற்காடு
    உள்ளி யாருயர்ந் தாரிவ் வுலகினில்
    தெள்ளி யாரவர் தேவரே. 1.57.1
    613 ஆடல் நாகம் அசைத்தள வில்லதோர்
    வேடங் கொண்டவன் வேற்காடு
    பாடி யும்பணிந் தாரிவ் வுலகினில்
    சேட ராகிய செல்வரே. 1.57.2
    614 பூதம் பாடப் புறங்காட் டிடையாடி
    வேத வித்தகன் வேற்காடு
    போதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர்க்
    கேதம் எய்துத லில்லையே. 1.57.3
    615 ஆழ்க டலெனக் கங்கை கரந்தவன்
    வீழ்ச டையினன் வேற்காடு
    தாழ்வு டைமனத் தாற்பணிந் தேத்திட
    பாழ்ப டும்மவர் பாவமே. 1.57.4
    616 காட்டி னாலும் அயர்த்திடக் காலனை
    வீட்டி னானுறை வேற்காடு
    பாட்டி னாற்பணிந் தேத்திட வல்லவர்
    ஓட்டி னார்வினை ஒல்லையே. 1.57.5
    617 தோலி னாலுடை மேவவல் லான்சுடர்
    வேலி னானுறை வேற்காடு
    நூலி னாற்பணிந் தேத்திட வல்லவர்
    மாலி னார்வினை மாயுமே. 1.57.6
    618 மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர்
    வில்லி னானுறை வேற்காடு
    சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
    செல்ல வல்லவர் தீர்க்கமே. 1.57.8
    619 மூரல் வெண்மதி சூடு முடியுடை
    வீரன் மேவிய வேற்காடு
    வார மாய்வழி பாடு நினைந்தவர்
    சேர்வர் செய்கழல் திண்ணமே. 1.57.8
    620 பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி
    விரக்கி னானுறை வேற்காட்டூர்
    அரக்கன் ஆண்மை யடரப் பட்டானிறை
    நெருக்கி னானை நினைமினே. 1.57.9
    621 மாறி லாமல ரானொடு மாலவன்
    வேற லானுறை வேற்காடு
    ஈறி லாமொழி யேமொழி யாயெழில்
    கூறி னார்க்கில்லை குற்றமே. 1.57.10
    622 விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு
    கண்டு நம்பன் கழல்பேணிச்
    சண்பை ஞானசம் பந்தன செந்தமிழ்
    கொண்டு பாடக் குணமாமே. 1.57.11

    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வேற்காட்டீசுவரர், தேவியார் - வேற்கண்ணியம்மை.

    திருச்சிற்றம்பலம்