MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.63 திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து
    பண் - தக்கேசி

    678 எரியார்மழுவொன் றேந்தியங்கை இடுதலையேகலனா
    வரியார்வளையா ரையம்வவ்வாய் மாநலம்வவ்வுதியே
    சரியாநாவின் வேதகீதன் தாமரைநான்முகத்தன்
    பெரியான்பிரமன் பேணியாண்ட பிரமபுரத்தானே. 1.63.1
    679 பெயலார்சடைக்கோர் திங்கள்சூடிப் பெய்பலிக்கென்றயலே
    கயலார்தடங்கண் அஞ்சொல்நல்லார் கண்டுயில்வவ்வுதியே
    இயலால்நடாவி இன்பமெய்தி இந்திரனாள்மண்மேல்
    வியலார்முரச மோங்குசெம்மை வேணுபுரத்தானே. 1.63.2
    680 நகலார்தலையும் வெண்பிறையும் நளிர்சடைமாட்டயலே
    பகலாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் பாய்கலைவவ்வுதியே
    அகலாதுறையும் மாநிலத்தில் அயலின்மையாலமரர்
    புகலால்மலிந்த பூம்புகலி மேவியபுண்ணியனே. 1.63.3
    681 சங்கோடிலங்கத் தோடுபெய்து காதிலோர்தாழ்குழையன்
    அங்கோல்வளையார் ஐயம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
    செங்கோல்நடாவிப் பல்லுயிர்க்குஞ் செய்வினைமெய்தெரிய
    வெங்கோத்தருமன் மேவியாண்ட வெங்குருமேயவனே. 1.63.4
    682 தணிநீர்மதியஞ் சூடிநீடு தாங்கியதாழ்சடையன்
    பிணிநீர்மடவார் ஐயம்வவ்வாய் பெய்கலைவவ்வுதியே
    அணிநீருலக மாகியெங்கும் ஆழ்கடலாலழுங்கத்
    துணிநீர்பணியத் தான்மிதந்த தோணிபுரத்தானே. 1.63.5
    683 கவர்பூம்புனலுந் தண்மதியுங் கமழ்சடைமாட்டயலே
    அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
    அவர்பூணரையர்க் காதியாயவள்தன் மன்னனாள்மண்மேற்
    தவர்பூம்பதிகள் எங்குமெங்குந் தங்குதராயவனே. 1.63.6
    684 முலையாழ்கெழும மொந்தைகொட்ட முன்கடைமாட்டயலே
    நிலையாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் நீநலம்வவ்வுதியே
    தலையாய்க்கிடந்திவ் வையமெல்லாந் தன்னதோராணைநடாய்ச்
    சிலையால்மலிந்த சீர்ச்சிலம்பன் சிரபுரமேயவனே. 1.63.7
    685 எருதேகொணர்கென் றேறியங்கை இடுதலையேகலனாக்
    கருதேர்மடவார் ஐயம்வவ்வாய் கண்டுயில்வவ்வுதியே
    ஒருதேர்கடாவி ஆரமரு ளொருபதுதோள்தொலையப்
    பொருதேர்வலவன் மேவியாண்ட புறவமர்புண்ணியனே. 1.63.8
    686 துவர்சேர்கலிங்கப் போர்வையாருந் தூய்மையிலாச்சமணுங்
    கவர்செய்துழலக் கண்டவண்ணங் காரிகைவார்குழலார்
    அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
    தவர்செய்நெடுவேற் சண்டனாளச் சண்பையமர்ந்தவனே. 1.63.9
    687 நிழலால்மலிந்த கொன்றைசூடி நீறுமெய்பூசிநல்ல
    குழலார்மடவா ரையம்வவ்வாய் கோல்வளைவவ்வுதியே
    அழலாயுலகங் கவ்வைதீர ஐந்தலைநீண்முடிய
    கழல்நாகரையன் காவலாகக் காழியமர்ந்தவனே. 1.63.10
    688 கட்டார்துழாயன் தாமரையான் என்றிவர்காண்பரிய
    சிட்டார்பலிதேர்ந் தையம்வவ்வாய் செய்கலைவவ்வுதியே
    நட்டார்நடுவே நந்தனாள நல்வினையாலுயர்ந்த
    கொட்டாறுடுத்த தண்வயல்சூழ் கொச்சையமர்ந்தவனே. 1.63.11
    689 கடையார்கொடிநன் மாடவீதிக் கழுமலவூர்க்கவுணி
    நடையார்பனுவல் மாலையாக ஞானசம்பந்தன்நல்ல
    படையார்மழுவன் றன்மேல்மொழிந்த பல்பெயர்ப்பத்தும்வல்லார்க்
    கடையாவினைகள் உலகில்நாளும் அமருலகாள்பவரே. 1.63.12

    திருச்சிற்றம்பலம்