MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  



    1.69 திரு அண்ணாமலை
    பண் - தக்கேசி

    743 பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள்
    மூவார்புரங்கள் எரித்தஅன்று மூவர்க்கருள்செய்தார்
    தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின்நிரையோடும்
    ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.1
    744 மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும் வானோர்பெருமானார்
    நஞ்சைக்கண்டத் தடக்குமதுவும் நன்மைப்பொருள்போலும்
    வெஞ்சொற்பேசும் வேடர்மடவார் இதணமதுவேறி
    அஞ்சொற்கிளிகள் ஆயோஎன்னும் அண்ணாமலையாரே. 1.69.2
    745 ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்லஅடியார்மேல்
    ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப்பொருள்போலும்
    ஏனத்திரளோ டினமான்கரடி இழியுமிரவின்கண்
    ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.3
    746 இழைத்தஇடையாள் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார்
    தழைத்தசடையார் விடையொன்றேறித் தரியார்புரமெய்தார்
    பிழைத்தபிடியைக் காணாதோடிப் பெருங்கைமதவேழம்
    அழைத்துத்திரிந்தங் குறங்குஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.4
    747 உருவிற்றிகழும் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார்
    செருவில்லொருகால் வளையஊன்றிச் செந்தீயெழுவித்தார்
    பருவிற்குறவர் புனத்திற்குவித்த பருமாமணிமுத்தம்
    அருவித்திரளோ டிழியுஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.5
    748 எனைத்தோரூழி யடியாரேத்த இமையோர்பெருமானார்
    நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலருறைகோயில்
    கனைத்தமேதி காணாதாயன் கைம்மேற்குழலூத
    அனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.6
    749 வந்தித்திருக்கும் அடியார்தங்கள் வருமேல்வினையோடு
    பந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரமனுறைகோயில்
    முந்தியெழுந்த முழவினோசை முதுகல்வரைகள்மேல்
    அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.7
    750 மறந்தான்கருதி வலியைநினைந்து மாறாயெடுத்தான்றோள்
    நிறந்தான்முரிய நெரியவூன்றி நிறையஅருள்செய்தார்
    திறந்தான்காட்டி அருளாயென்று தேவரவர்வேண்ட
    அறந்தான்காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே. 1.69.8
    751 தேடிக்காணார் திருமால்பிரமன் தேவர்பெருமானை
    மூடியோங்கி முதுவேயுகுத்த முத்தம்பலகொண்டு
    கூடிக்குறவர் மடவார்குவித்துக் கொள்ளவம்மினென்
    றாடிப்பாடி யளக்குஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.9
    752 தட்டையிடுக்கித் தலையைப்பறித்துச் சமணேநின்றுண்ணும்
    பிட்டர்சொல்லுக் கொள்ளவேண்டா பேணித்தொழுமின்கள்
    வட்டமுலையாள் உமையாள்பங்கர் மன்னியுறைகோயில்
    அட்டமாளித் திரள்வந்தணையும் அண்ணாமலையாரே. 1.69.10
    753 அல்லாடரவம் இயங்குஞ்சாரல் அண்ணாமலையாரை
    நல்லார்பரவப் படுவான்காழி ஞானசம்பந்தன்
    சொல்லால்மலிந்த பாடலான பத்துமிவைகற்று
    வல்லாரெல்லாம் வானோர்வணங்க மன்னிவாழ்வாரே. 1.69.11

    திருச்சிற்றம்பலம்