MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  



    1.71 திருநறையூர்ச்சித்தீச்சரம்
    பண் - தக்கேசி

    765 765
    பிறைகொள்சடையர் புலியினுரியர் பேழ்வாய்நாகத்தர்
    கறைகொள்கண்டர் கபாலமேந்துங் கையர்கங்காளர்
    மறைகொள்கீதம் பாடச்சேடர் மனையில்மகிழ்வெய்திச்
    சிறைகொள்வண்டு தேனார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே. 1.71.1
    766 பொங்கார்சடையர் புனலர்அனலர் பூதம்பாடவே
    தங்காதலியுந் தாமுமுடனாய்த் தனியோர்விடையேறிக்
    கொங்கார்கொன்றை வன்னிமத்தஞ் சூடிக்குளிர்பொய்கைச்
    செங்கால்அனமும் பெடையுஞ்சேரும் சித்தீச்சரத்தாரே. 1.71.2
    767 முடிகொள்சடையர் முளைவெண்மதியர் மூவாமேனிமேல்
    பொடிகொள்நூலர் புலியினதளர் புரிபுன்சடைதாழக்
    கடிகொள்சோலை வயல்சூழ்மடுவிற் கயலாரினம்பாயக்
    கொடிகொள்மாடக் குழாமார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே. 1.71.3
    768 பின்றாழ்சடைமேல் நகுவெண்டலையர் பிரமன்றலையேந்தி
    மின்றாழுருவிற் சங்கார்குழைதான் மிளிரும்ஒருகாதர்
    பொன்றாழ்கொன்றை செருந்திபுன்னை பொருந்துசெண்பகஞ்
    சென்றார்செல்வத் திருவார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே. 1.71.4
    769 நீரார்முடியர் கறைகொள்கண்டர் மறைகள்நிறைநாவர்
    பாரார்புகழால் பத்தர்சித்தர் பாடியாடவே
    தேரார்வீதி முழவார்விழவின் ஒலியுந்திசைசெல்லச்
    சீரார்கோலம் பொலியும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே. 1.71.5
    770 நீண்டசடையர் நிரைகொள்கொன்றை விரைகொள்மலர்மாலை
    தூண்டுசுடர்பொன் னொளிகொள்மேனிப் பவளத்தெழிலார்வந்
    தீண்டுமாடம் எழிலார்சோலை இலங்குகோபுரந்
    தீண்டுமதியந் திகழும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே. 1.71.6
    771 குழலார்சடையர் கொக்கின்இறகர் கோலநிறமத்தந்
    தழலார்மேனித் தவளநீற்றர் சரிகோவணக்கீளர்
    எழிலார்நாகம் புலியினுடைமேல் இசைத்துவிடையேறிக்
    கழலார்சிலம்பு புலம்பவருவார் சித்தீச்சரத்தாரே. 1.71.7
    772 கரையார்கடல்சூழ் இலங்கைமன்னன் கயிலைமலைதன்னை
    வரையார்தோளா லெடுக்கமுடிகள் நெரித்துமனமொன்றி
    உரையார்கீதம் பாடநல்ல வுலப்பிலருள்செய்தார்
    திரையார்புனல்சூழ் செல்வநறையூர்ச் சித்தீச்சரத்தாரே. 1.71.8
    773 நெடியான்பிரமன் நேடிக்காணார் நினைப்பார்மனத்தாராய்
    அடியாரவரும் அருமாமறையும் அண்டத்தமரரும்
    முடியால்வணங்கிக் குணங்களேத்தி முதல்வாஅருளென்ன
    செடியார்செந்நெல் திகழும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே. 1.71.9
    774 நின்றுண்சமணர் இருந்துண்தேரர் நீண்டபோர்வையார்
    ஒன்றுமுணரா ஊமர்வாயில் உரைகேட்டுழல்வீர்காள்
    கன்றுண்பயப்பா லுண்ணமுலையில் கபாலமயல்பொழியச்
    சென்றுண்டார்ந்து சேரும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே. 1.71.10
    775 குயிலார்கோல மாதவிகள் குளிர்பூஞ்சுரபுன்னை
    செயிலார்பொய்கை சேரும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரை
    மயிலார்சோலை சூழ்ந்தகாழி மல்குசம்பந்தன்
    பயில்வார்க்கினிய பாடல்வல்லார் பாவநாசமே. 1.71.11

    திருச்சிற்றம்பலம்