MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  



    1.72 திருக்குடந்தைக்காரோணம்
    பண் - தக்கேசி

    776 வாரார்கொங்கை மாதோர்பாக மாகவார்சடை
    நீரார்கங்கை திங்கள்சூடி நெற்றிஒற்றைக்கண்
    கூரார்மழுவொன் றேந்தியந்தண் குழகன்குடமூக்கிற்
    காரார்கண்டத் தெண்டோ ளெந்தை காரோணத்தாரே. 1.72.1
    777 முடியார்மன்னர் மடமான்விழியார் மூவுலகும்மேத்தும்
    படியார்பவள வாயார்பலரும் பரவிப்பணிந்தேத்தக்
    கொடியார்விடையார் மாடவீதிக் குடந்தைக்குழகாருங்
    கடியார்சோலைக் கலவமயிலார் காரோணத்தாரே. 1.72.2
    778 மலையார்மங்கை பங்கரங்கை அனலர்மடலாருங்
    குலையார்தெங்கு குளிர்கொள்வாழை யழகார்குடமூக்கின்
    முலையாரணிபொன் முளைவெண்ணகையார் மூவாமதியினார்
    கலையார்மொழியார் காதல்செய்யுங் காரோணத்தாரே. 1.72.3
    779 போதார்புனல்சேர் கந்தமுந்திப் பொலியவ்வழகாருந்
    தாதார்பொழில்சூழ்ந் தெழிலார்புறவி லந்தண்குடமூக்கின்
    மாதார்மங்கை பாகமாக மனைகள்பலிதேர்வார்
    காதார்குழையர் காளகண்டர் காரோணத்தாரே. 1.72.4
    780 பூவார்பொய்கை அலர்தாமரைசெங் கழுநீர்புறவெல்லாந்
    தேவார்சிந்தை அந்தணாளர் சீராலடிபோற்றக்
    கூவார்குயில்கள் ஆலும்மயில்கள் இன்சொற்கிளிப்பிள்ளை
    காவார்பொழில்சூழ்ந் தழகார்குடந்தைக் காரோணத்தாரே. 1.72.5
    781 மூப்பூர்நலிய நெதியார்விதியாய் முன்னேஅனல்வாளி
    கோப்பார்பார்த்தன் நிலைகண்டருளுங் குழகர்குடமூக்கில்
    தீர்ப்பாருடலில் அடுநோயவலம் வினைகள்நலியாமைக்
    காப்பார்காலன் அடையாவண்ணங் காரோணத்தாரே. 1.72.6
    782 ஊனார்தலைகை யேந்தியுலகம் பலிதேர்ந்துழல்வாழ்க்கை
    மானார்தோலார் புலியினுடையார் கரியினுரிபோர்வை
    தேனார்மொழியார் திளைத்தங்காடித் திகழுங்குடமூக்கிற்
    கானார்நட்டம் உடையார்செல்வக் காரோணத்தாரே. 1.72.7
    783 வரையார்திரள்தோள் மதவாளரக்கன் எடுப்பமலைசேரும்
    விரையார்பாதம் நுதியாலூன்ற நெரிந்துசிரம்பத்தும்
    உரையார்கீதம் பாடக்கேட்டங் கொளிவாள்கொடுத்தாருங்
    கரையார்பொன்னி சூழ்தண்குடந்தைக் காரோணத்தாரே. 1.72.8
    784 கரியமாலுஞ் செய்யபூமேல் அயனுங்கழறிப்போய்
    அரியவண்டந் தேடிப்புக்கும் அளக்கவொண்கிலார்
    தெரியவரிய தேவர்செல்வந் திகழுங்குடமூக்கிற்
    கரியகண்டர் காலகாலர் காரோணத்தாரே. 1.72.9
    785 நாணார்அமணர் நல்லதறியார் நாளுங்குரத்திகள்
    பேணார்தூய்மை மாசுகழியார் பேசேலவரோடுஞ்
    சேணார்மதிதோய் மாடமல்கு செல்வநெடுவீதிக்
    கோணாகரமொன் றுடையார்குடந்தைக் காரோணத்தாரே. 1.72.10
    786 கருவார்பொழில்சூழ்ந் தழகார்செல்வக் காரோணத்தாரைத்
    திருவார்செல்வம் மல்குசண்பைத் திகழுஞ்சம்பந்தன்
    உருவார்செஞ்சொல் மாலையிவைபத் துரைப்பாருலகத்துக்
    கருவாரிடும்பைப் பிறப்பதறுத்துக் கவலைகழிவாரே. 1.72.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சோமநாதர், தேவியார் - தேனார்மொழியம்மை.

    திருச்சிற்றம்பலம்