MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.73 திருக்கானூர்
    பண் - தக்கேசி

    787 வானார்சோதி மன்னுசென்னி வன்னிபுனங்கொன்றைத்
    தேனார்போது தானார்கங்கை திங்களொடுசூடி
    மானேர்நோக்கி கண்டங்குவப்ப மாலையாடுவார்
    கானூர்மேய கண்ணார்நெற்றி ஆனூர் செல்வரே. 1.73.1
    788 நீந்தலாகா வெள்ளமூழ்கு நீள்சடைதன்மேலோர்
    ஏய்ந்தகோணற் பிறையோடரவு கொன்றையெழிலார
    போந்தமென்சொல் இன்பம்பயந்த மைந்தரவர்போலாங்
    காந்தள்விம்மு கானூர்மேய சாந்தநீற்றாரே. 1.73.2
    789 சிறையார்வண்டுந் தேனும்விம்மு செய்யமலர்க்கொன்றை
    மறையார்பாட லாடலோடு மால்விடைமேல்வருவார்
    இறையார்வந்தென் இல்புகுந்தென் எழில்நலமுங்கொண்டார்
    கறையார்சோலைக் கானூர்மேய பிறையார்சடையாரே. 1.73.3
    790 விண்ணார்திங்கள் கண்ணிவெள்ளை மாலையதுசூடித்
    தண்ணாரக்கோ டாமைபூண்டு தழைபுன்சடைதாழ
    எண்ணாவந்தென் இல்புகுந்தங் கெவ்வநோய்செய்தான்
    கண்ணார்சோலைக் கானூர்மேய விண்ணோர்பெருமானே. 1.73.4
    791 தார்கொள்கொன்றைக் கண்ணியோடுந் தண்மதியஞ்சூடி
    சீர்கொள்பாட லாடலோடு சேடராய்வந்து
    ஊர்கள்தோறும் ஐயம்ஏற்றென் னுள்வெந்நோய்செய்தார்
    கார்கொள்சோலைக் கானூர்மேய கறைக்கண்டத்தாரே. 1.73.5
    792 முளிவெள்ளெலும்பு நீறுநூலும் மூழ்குமார்பராய்
    எளிவந்தார்போல் ஐயமென்றென் இல்லேபுகுந்துள்ளத்
    தெளிவுநாணுங் கொண்டகள்வர் தேறலார்பூவில்
    களிவண்டியாழ்செய் கானூர்மேய ஒளிவெண்பிறையாரே. 1.73.6
    793 மூவாவண்ணர் முளைவெண்பிறையர் முறுவல்செய்திங்கே
    பூவார்கொன்றை புனைந்துவந்தார் பொக்கம்பலபேசிப்
    போவார்போல மால்செய்துள்ளம் புக்கபுரிநூலர்
    தேவார்சோலைக் கானூர்மேய தேவதேவரே. 1.73.7
    794 தமிழின்நீர்மை பேசித்தாளம் வீணைபண்ணிநல்ல
    முழவம்மொந்தை மல்குபாடல் செய்கையிடமோவார்
    குமிழின்மேனி தந்துகோல நீர்மையதுகொண்டார்
    கமழுஞ்சோலைக் கானூர்மேய பவளவண்ணரே. 1.73.8
    795 அந்தமாதி அயனுமாலும் ஆர்க்குமறிவரியான்
    சிந்தையுள்ளும் நாவின்மேலுஞ் சென்னியுமன்னினான்
    வந்தென்னுள்ளம் புகுந்துமாலை காலையாடுவான்
    கந்தமல்கு கானூர்மேய எந்தைபெம்மானே. 1.73.9
    796 ஆமையரவோ டேனவெண்கொம் பக்குமாலைபூண்
    டாமோர்கள்வர் வெள்ளர்போல உள்வெந்நோய்செய்தார்
    ஓமவேத நான்முகனுங் கோணாகணையானுஞ்
    சேமமாய செல்வர்கானூர் மேயசேடரே. 1.73.10
    797 கழுதுதுஞ்சுங் கங்குலாடுங் கானூர்மேயானைப்
    பழுதில்ஞான சம்பந்தன்சொல் பத்தும்பாடியே
    தொழுதுபொழுது தோத்திரங்கள் சொல்லித்துதித்துநின்
    றழுதுநக்கும் அன்புசெய்வார் அல்லலறுப்பாரே. 1.73.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - செம்மேனிநாயகர், தேவியார் - சிவயோகநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்