MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.93 திருமுதுகுன்றம் - திருவிருக்குக்குறள்
    பண் - குறிஞ்சி

    1003 நின்று மலர்தூவி, இன்று முதுகுன்றை
    நன்றும் ஏத்துவீர்க், கென்றும் இன்பமே. 1.93.1
    1004 அத்தன் முதுகுன்றைப், பத்தி யாகிநீர்
    நித்தம் ஏத்துவீர்க், குய்த்தல் செல்வமே. 1.93.2
    1005 ஐயன் முதுகுன்றைப், பொய்கள் கெடநின்று
    கைகள் கூப்புவீர், வைய முமதாமே. 1.93.3
    1006 ஈசன் முதுகுன்றை, நேச மாகிநீர்
    வாச மலர்தூவப், பாச வினைபோமே. 1.93.4
    1007 மணியார் முதுகுன்றைப், பணிவா ரவர்கண்டீர்
    பிணியா யினகெட்டுத், தணிவா ருலகிலே. 1.93.5
    1008 மொய்யார் முதுகுன்றில், ஐயா வெனவல்லார்
    பொய்யா ரிரவோர்க்குச், செய்யாள் அணியாளே. 1.93.6
    1009 விடையான் முதுகுன்றை, இடையா தேத்துவார்
    படையா யினசூழ, உடையா ருலகமே. 1.93.7
    1010 பத்துத் தலையோனைக், கத்த விரலூன்றும்
    அத்தன் முதுகுன்றை, மொய்த்துப் பணிமினே. 1.93.8
    1011 இருவ ரறியாத, ஒருவன் முதுகுன்றை
    உருகி நினைவார்கள், பெருகி நிகழ்வோரே. 1.93.9
    1012 தேரர் அமணருஞ், சேரும் வகைஇல்லான்
    நேரில் முதுகுன்றை, நீர்நின் றுள்குமே. 1.93.10
    1013 நின்று முதுகுன்றை, நன்று சம்பந்தன்
    ஒன்றும் உரைவல்லார், என்றும் உயர்வோரே. 1.93.11

    திருச்சிற்றம்பலம்