MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.104 திருப்புகலி
    பண் - வியாழக்குறிஞ்சி

    1122 ஆடல் அரவசைத்தான் அருமாமறை தான்விரித்தான் கொன்றை
    சூடிய செஞ்சடையான் சுடுகாடமர்ந்த பிரான்
    ஏடவிழ் மாமலையாள் ஒருபாகம் அமர்ந்தடியார் ஏத்த
    ஆடிய எம்மிறையூர் புகலிப் பதியாமே. 1.104.1
    1123 ஏல மலிகுழலார் இசைபாடி எழுந்தருளாற் சென்று
    சோலை மலிசுனையிற் குடைந்தாடித் துதிசெய்ய
    ஆலை மலிபுகைபோய் அண்டர்வானத்தை மூடிநின்று நல்ல
    மாலை யதுசெய்யும் புகலிப் பதியாமே. 1.104.2
    1124 ஆறணி செஞ்சடையான் அழகார்புரம் மூன்றுமன்று வேவ
    நீறணி யாகவைத்த நிமிர்புன்சடை எம்மிறைவன்
    பாறணி வெண்டலையிற் பகலேபலி என்றுவந்து நின்ற
    வேறணி கோலத்தினான் விரும்பும் புகலியதே. 1.104.3
    1125 வெள்ள மதுசடைமேற் கரந்தான் விரவார்புரங்கள் மூன்றுங்
    கொள்ள எரிமடுத்தான் குறைவின்றி யுறைகோயில்
    அள்ளல் விளைகழனி அழகார்விரைத் தாமரைமேல் அன்னப்
    புள்ளினம் வைகியெழும் புகலிப் பதிதானே. 1.104.4
    1126 சூடும் மதிச்சடைமேல் சுரும்பார்மலர்க் கொன்றைதுன்ற நட்டம்
    ஆடும் அமரர்பிரான் அழகார்உமை யோடுமுடன்
    வேடு படநடந்த விகிர்தன் குணம்பரவித் தொண்டர்
    பாட இனிதுறையும் புகலிப் பதியாமே. 1.104.5
    1127 மைந்தணி சோலையின்வாய் மதுப்பாய்வரி வண்டினங்கள் வந்து
    நந்திசை பாடநடம் பயில்கின்ற நம்பனிடம்
    அந்திசெய் மந்திரத்தால் அடியார்கள் பரவியெழ விரும்பும்
    புந்திசெய் நால்மறையோர் புகலிப் பதிதானே. 1.104.6
    1128 மங்கையோர் கூறுகந்த மழுவாளன் வார்சடைமேல் திங்கள்
    கங்கைதனைக் கரந்த கறைக்கண்டன் கருதுமிடஞ்
    செங்கயல் வார்கழனி திகழும் புகலிதனைச் சென்றுதம்
    அங்கையி னால்தொழுவார் அவலம் அறியாரே. 1.104.7
    1129 வல்லிய நுண்ணிடையாள் உமையாள் விருப்பனவன் நண்ணும்
    நல்லிட மென்றறியான் நலியும் விறலரக்கன்
    பல்லொடு தோள்நெரிய விரலூன்றிப் பாடலுமே கைவாள்
    ஒல்லை அருள்புரிந்தான் உறையும் புகலியதே. 1.104.8
    1130 தாதலர் தாமரைமேல் அயனுந் திருமாலுந் தேடி
    ஓதியுங் காண்பரிய உமைகோன் உறையுமிடம்
    மாதவி வான்வகுளம் மலர்ந்தெங்கும் விரைதோய வாய்ந்த
    போதலர் சோலைகள்சூழ் புகலிப் பதிதானே. 1.104.9
    1131 வெந்துவர் மேனியினார் விரிகோவ ணநீத்தார் சொல்லும்
    அந்தர ஞானமெல்லாம் அவையோர் பொருளென்னேல்
    வந்தெதி ரும்புரமூன் றெரித்தான் உறைகோயில் வாய்ந்த
    புந்தியினார் பயிலும் புகலிப் பதிதானே. 1.104.10
    1132 வேதமோர் கீதமுணர் வாணர்தொழு தேத்தமிகு வாசப்
    போதனைப் போல்மறையோர் பயிலும் புகலிதன்னுள்
    நாதனை ஞானமிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில்
    ஓதவல் லாருலகில் உறுநோய் களைவாரே. 1.104.11

    திருச்சிற்றம்பலம்