MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.110 திருவிடைமருதூர்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1185 மருந்தவன் வானவர் தானவர்க்கும்
    பெருந்தகை பிறவினொ டிறவுமானான்
    அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ்
    இருந்தவன் வளநகர் இடைமருதே. 1.110.1
    1186 தோற்றவன் கேடவன் துணைமுலையாள்
    கூற்றவன் கொல்புலித் தோலசைத்த
    நீற்றவன் நிறைபுனல் நீள்சடைமேல்
    ஏற்றவன் வளநகர் இடைமருதே. 1.110.2
    1187 படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன்
    நடைநவில் ஏற்றினன் ஞாலமெல்லாம்
    முடைதலை இடுபலி கொண்டுழல்வான்
    இடைமரு தினிதுறை யெம்மிறையே. 1.110.3
    1188 பணைமுலை உமையொரு பங்கனொன்னார்
    துணைமதில் மூன்றையுஞ் சுடரில்மூழ்கக்
    கணைதுரந் தடுதிறற் காலற்செற்ற
    இணையிலி வளநகர் இடைமருதே. 1.110.4
    1189 பொழிலவன் புயலவன் புயலியக்குந்
    தொழிலவன் துயரவன் துயரகற்றுங்
    கழலவன் கரியுரி போர்த்துகந்த
    எழிலவன் வளநகர் இடைமருதே. 1.110.5
    1190 நிறையவன் புனலொடு மதியும்வைத்த
    பொறையவன் புகழவன் புகழநின்ற
    மறையவன் மறிகடல் நஞ்சையுண்ட
    இறையவன் வளநகர் இடைமருதே. 1.110.6
    1191 நனிவளர் மதியொடு நாகம்வைத்த
    பனிமலர்க் கொன்றையம் படர்சடையன்
    முனிவரொ டமரர்கள் முறைவணங்க
    இனிதுறை வளநகர் இடைமருதே. 1.110.7
    1192 தருக்கின அரக்கன தாளுந்தோளும்
    நெரித்தவன் நெடுங்கைமா மதகரியன்
    றுரித்தவன் ஒன்னலர் புரங்கள்மூன்றும்
    எரித்தவன் வளநகர் இடைமருதே. 1.110.8
    1193 பெரியவன் பெண்ணினொ டாணுமானான்
    வரியர வணைமறி கடற்றுயின்ற
    கரியவன் அலரவன் காண்பரிய
    எரியவன் வளநகர் இடைமருதே. 1.110.9
    1194 சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன
    புந்தியில் உரையவை பொருள்கொளாதே
    அந்தணர் ()ஓத்தினொ டரவமோவா
    எந்தைதன் வளநகர் இடைமருதே.

    () ஓத்து என்பது வேதம். 1.110.10
    1195 இலைமலி பொழிலிடை மருதிறையை
    நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
    பலமிகு தமிழிவை பத்தும்வல்லார்
    உலகுறு புகழினொ டோ ங்குவரே. 1.110.11

    திருச்சிற்றம்பலம்