MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.116 திரு நீலகண்டம்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1249 அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
    உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
    கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்
    செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.1
    1250 காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
    ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்
    பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
    தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.2
    1251 முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம்
    விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
    இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர்
    சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.3
    1252 விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
    புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே
    கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
    திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.4
    1253 மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர்
    கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ
    சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம்
    செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.5
    1254 மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப்
    பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
    பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
    சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.6
    () இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.116.7
    1255 கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
    உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
    செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே
    திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.8
    1256 நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
    தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர்
    தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்
    சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.9
    1257 சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
    பாக்கிய மின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார்
    பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
    தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.10
    1258 பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
    இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண்
    திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
    நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே. 1.116.11

    இது திருக்கொடிமாடச் செங்குன்றூரில் அடியார்களுக்குக்
    கண்ட சுரப்பிணிநீங்க வோதியருளியது.

    திருச்சிற்றம்பலம்