MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.117 திருப்பிரமபுரம் - மொழிமாற்று
    பண் - வியாழக்குறிஞ்சி

    1259 காட தணிகலங் காரர வம்பதி காலதனிற்
    தோட தணிகுவர் சுந்தரக் காதினில் தூச்சிலம்பர்
    வேட தணிவர் விசயற் குருவம்வில் லுங்கொடுப்பர்
    பீட தணிமணி மாடப் பிரம புரத்தாரே. 1.117.1
    1260 கற்றைச் சடையது கங்கணம் முன்கையில் திங்கள்கங்கை
    பற்றித்து முப்புரம் பார்படைத் தோன்றலை சுட்டதுபண்
    டெற்றித்துப் பாம்பை யணிந்தது கூற்றை யெழில்விளங்கும்
    வெற்றிச் சிலைமதில் வேணு புரத்தெங்கள் வேதியரே. 1.117.2
    1261 கூவிளங் கையது பேரி சடைமுடிக் கூட்டத்தது
    தூவிளங் கும்பொடி பூண்டது பூசிற்று துத்திநாகம்
    ஏவிளங் குந்நுத லாளையும் பாகம் உரித்தனரின்
    பூவிளஞ் சோலைப் புகலியுள் மேவிய புண்ணியரே. 1.117.3
    1262 உரித்தது பாம்பை யுடல்மிசை இட்டதோர் ஒண்களிற்றை
    எரித்ததொ ராமையை இன்புறப் பூண்டது முப்புரத்தைச்
    செருத்தது சூலத்தை ஏந்திற்று தக்கனை வேள்விபன்னூல்
    விரித்தவர் வாழ்தரு வேங்குரு வில்வீற் றிருந்தவரே. 1.117.4
    1263 கொட்டுவர் அக்கரை யார்ப்பது தக்கை குறுந்தாளன
    விட்டுவர் பூதங் கலப்பில ரின்புக ழென்புலவின்
    மட்டுவ ருந்தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர்வான்
    தொட்டுவ ருங்கொடித் தோணி புரத்துறை சுந்தரரே. 1.117.5
    1264 சாத்துவர் பாசந் தடக்கையி லேந்துவர் கோவணந்தங்
    கூத்தவர் கச்சுக் குலவிநின் றாடுவர் கொக்கிறகும்
    பேர்த்தவர் பல்படை பேயவை சூடுவர் பேரெழிலார்
    பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே. 1.117.6
    1265 காலது கங்கை கற்றைச்சடை யுள்ளாற் கழல்சிலம்பு
    மாலது ஏந்தல் மழுவது பாகம் வளர்கொழுங்கோட்
    டாலது ஊர்வர் அடலேற் றிருப்பர் அணிமணிநீர்ச்
    சேலது கண்ணியொர் பங்கர் சிரபுரம் மேயவரே. 1.117.7
    1266 நெருப்புரு வெள்விடை மேனியர் ஏறுவர் நெற்றியின்கண்
    மருப்புரு வன்கண்ணர் தாதையைக் காட்டுவர் மாமுருகன்
    விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை யார்விறல் மாதவர்வாழ்
    பொருப்புறு மாளிகைத் தென்புற வத்தணி புண்ணியரே. 1.117.8
    1267 இலங்கைத் தலைவனை யேந்திற் றிறுத்த திரலை யின்னாள்
    கலங்கிய கூற்றுயிர் பெற்றது மாணி குமைபெற்றது
    கலங்கிளர் மொந்தையின் ஆடுவர் கொட்டுவர் காட்டகத்துச்
    சலங்கிளர் வாழ்வயல் சண்பையுள் மேவிய தத்துவரே. 1.117.9
    1268 அடியிணை கண்டிலன் தாமரை யோன்மால் முடிகண்டிலன்
    கொடியணி யும்புலி யேறுகந் தேறுவர் தோலுடுப்பர்
    பிடியணி யுந்நடை யாள்வெற் பிருப்பதோர் கூறுடையர்
    கடியணி யும்பொழிற் காழியுள் மேய கறைக்கண்டரே. 1.117.10
    1269 கையது வெண்குழை காதது சூலம் அமணர்புத்தர்
    எய்துவர் தம்மை அடியவர் எய்தாரோர் ஏனக்கொம்பு
    மெய்திகழ் கோவணம் பூண்ப துடுப்பது மேதகைய
    கொய்தலர் பூம்பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே. 1.117.11
    1270 கல்லுயர் கழுமல விஞ்சியுள் மேவிய கடவுள்தன்னை
    நல்லுரை ஞானசம் பந்தன்ஞா னத்தமிழ் நன்குணரச்
    சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லைவானவர் தங்களொடுஞ்
    செல்குவர் சீரரு ளாற்பெற லாம்சிவ லோகமதே. 1.117.12

    திருச்சிற்றம்பலம்