MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.119 திருக்கள்ளில்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1282 முள்ளின்மேல் முதுகூகை முரலுஞ் சோலை
    வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த
    கள்ளில்மேய அண்ணல் கழல்கள் நாளும்
    உள்ளுமேல் உயர்வெய்தல் ஒரு தலையே. 1.119.1
    1283 ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான்
    ஓடலாற் கலனில்லான் உறை பதியால்
    காடலாற் கருதாத கள்ளில் மேயான்
    பாடெலாம் பெரியார்கள் பரசு வாரே. 1.119.2
    1284 எண்ணார்மும் மதிலெய்த இமையா முக்கண்
    பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி
    கண்ணார் நீறணிமார்பன் கள்ளில் மேயான்
    பெண்ணாணாம் பெருமானெம் பிஞ்ஞ கனே. 1.119.3
    1285 பிறைபெற்ற சடையண்ணல் பெடைவண் டாலும்
    நறைபெற்ற விரிகொன்றைத் தார் நயந்த
    கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளில் மேயான்
    நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சு ளானே. 1.119.4
    1286 விரையாலும் மலராலும் விழுமை குன்றா
    உரையாலு மெதிர்கொள்ள வூரா ரம்மாக்
    கரையார்பொன் புனல்வேலிக் கள்ளில் மேயான்
    அரையார்வெண் கோவணத்த அண்ணல் தானே. 1.119.5
    1287 நலனாய பலிகொள்கை நம்பான் நல்ல
    வலனாய மழுவாளும் வேலும் வல்லான்
    கலனாய தலையோட்டான் கள்ளில் மேயான்
    மலனாய தீர்த்தெய்தும் மாதவத் தோர்க்கே. 1.119.6
    1288 பொடியார்மெய் பூசினும் புறவின் நறவங்
    குடியாவூர் திரியினுங் கூப்பி டினுங்
    கடியார்பூம் பொழிற்சோலைக் கள்ளில் மேயான்
    அடியார்பண் பிகழ்வார்கள் ஆதர் களே. 1.119.7
    1289 திருநீல மலரொண்கண் தேவி பாகம்
    புரிநூலுந் திருநீறும் புல்கு மார்பில்
    கருநீல மலர்விம்மு கள்ளி லென்றும்
    பெருநீல மிடற்றண்ணல் பேணு வதே. 1.119.8
    1290 வரியாய மலரானும் வையந் தன்னை
    உரிதாய அளந்தானும் உள்ளு தற்கங்
    கரியானும் அறியாத கள்ளில் மேயான்
    பெரியானென் றறிவார்கள் பேசு வாரே. 1.119.9
    1291 ஆச்சியப் பேய்களோ டமணர் குண்டர்
    பேச்சிவை நெறியல்ல பேணு மின்கள்
    மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில்
    தீச்செய்த சடையண்ணல் திருந் தடியே. 1.119.10
    1292 திகைநான்கும் புகழ்காழிச் செல்வம் மல்கு
    பகல்போலும் பேரொளியான் பந்தன் நல்ல
    முகைமேவு முதிர்சடையான் கள்ளி லேத்தப்
    புகழோடும் பேரின்பம் புகுதும் அன்றே. 1.119.11

    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சிவானந்தேசுவரர், தேவியார் - ஆனந்தவல்லியம்மை.

    திருச்சிற்றம்பலம்