MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.120 திருவையாறு - திருவிராகம்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1293 பணிந்தவர் அருவினை பற்றறுத் தருள்செயத்
    துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில்
    பிணிந்தவன் அரவொடு பேரெழி லாமைகொண்
    டணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.1
    1294 கீர்த்திமிக் கவன்நகர் கிளரொளி யுடனடப்
    பார்த்தவன் பனிமதி படர்சடை வைத்துப்
    போர்த்தவன் கரியுரி புலியதள் அரவரை
    ஆர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.2
    1295 வரிந்தவெஞ் சிலைபிடித் தவுணர்தம் வளநகர்
    எரிந்தற வெய்தவன் எழில்திகழ் மலர்மேல்
    இருந்தவன் சிரமது இமையவர் குறைகொள
    அரிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.3
    1296 வாய்ந்தவல் லவுணர்தம் வளநகர் எரியிடை
    மாய்ந்தற எய்தவன் வளர்பிறை விரிபுனல்
    தோய்ந்தெழு சடையினன் தொன்மறை ஆறங்கம்
    ஆய்ந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.4
    1297 வானமர் மதிபுல்கு சடையிடை அரவொடு
    தேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன்
    மானன மென்விழி மங்கையொர் பாகமும்
    ஆனவன் வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.5
    1298 முன்பனை முனிவரொ டமரர்கள் தொழுதெழும்
    இன்பனை இணையில இறைவனை எழில்திகழ்
    என்பொனை யேதமில் வேதியர் தாந்தொழும்
    அன்பன வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.6
    1299 வன்றிறல் அவுணர்தம் வளநகர் எரியிடை
    வெந்தற எய்தவன் விளங்கிய மார்பினில்
    பந்தமர் மெல்விரல் பாகம தாகிதன்
    அந்தமில் வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.7
    1300 விடைத்தவல் லரக்கன்நல் வெற்பினை யெடுத்தலும்
    அடித்தலத் தால்இறை யூன்றிமற் றவனது
    முடித்தலை தோளவை நெரிதர முறைமுறை
    அடர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.8
    1301 விண்ணவர் தம்மொடு வெங்கதி ரோனனல்
    எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட
    கண்ணனும் பிரமனும் காண்பரி தாகிய
    அண்ணல்தன் வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.9
    1302 மருளுடை மனத்துவன் சமணர்கள் மாசறா
    இருளுடை இணைத்துவர்ப் போர்வையி னார்களுந்
    தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமா
    அருளுடை யடிகள்தம் அந்தண் ஐயாறே. 1.120.10
    1303 நலம்மலி ஞானசம் பந்தன தின்றமிழ்
    அலைமலி புனல்மல்கும் அந்தண்ஐ யாற்றினைக்
    கலைமலி தமிழிவை கற்றுவல் லார்மிக
    நலமலி புகழ்மிகு நன்மையர் தாமே. 1.120.11

    திருச்சிற்றம்பலம்