MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.121 திருவிடைமருதூர் - திருவிராகம்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1304 நடைமரு திரிபுரம் எரியுண நகைசெய்த
    படைமரு தழலெழ மழுவல பகவன்
    புடைமரு திளமுகில் வளமமர் பொதுளிய
    இடைமரு தடையநம் இடர்கெடல் எளிதே. 1.121.1
    1305 மழைநுழை மதியமொ டழிதலை மடமஞ்ஞை
    கழைநுழை புனல்பெய்த கமழ்சடை முடியன்
    குழைநுழை திகழ்செவி அழகொடு மிளிர்வதொர்
    இழைநுழை புரியணல் இடமிடை மருதே. 1.121.2
    1306 அருமையன் எளிமையன் அழல்விட மிடறினன்
    கருமையின் ஒளிபெறு கமழ்சடை முடியன்
    பெருமையன் சிறுமையன் பிணைபெணொ டொருமையின்
    இருமையும் உடையணல் இடமிடை மருதே. 1.121.3
    1307 பொரிபடு முதுகுற முளிகளி புடைபுல்கு
    நரிவளர் சுடலையுள் நடமென நவில்வோன்
    வரிவளர் குளிர்மதி யொளிபெற மிளிர்வதொர்
    எரிவளர் சடையணல் இடமிடை மருதே. 1.121.4
    1308 வருநல மயிலன மடநடை மலைமகள்
    பெருநல முலையிணை பிணைசெய்த பெருமான்
    செருநல மதிலெய்த சிவனுறை செழுநகர்
    இருநல புகழ்மல்கும் இடமிடை மருதே. 1.121.5
    1309 கலையுடை விரிதுகில் கமழ்குழல் அகில்புகை
    மலையுடை மடமகள் தனையிடம் உடையோன்
    விலையுடை அணிகலன் இலனென மழுவினொ
    டிலையுடை படையவன் இடமிடை மருதே. 1.121.6
    1310 வளமென வளர்வன வரிமுரல் பறவைகள்
    இளமணல் அணைகரை யிசைசெயும் இடைமரு
    துளமென நினைபவர் ஒலிகழல் இணையடி
    குளமண லுறமூழ்கி வழிபடல் குணமே. 1.121.7
    1311 மறையவன் உலகவன் மதியவன் மதிபுல்கு
    துறையவன் எனவல அடியவர் துயரிலர்
    கறையவன் மிடறது கனல்செய்த கமழ்சடை
    இறையவன் உறைதரும் இடமிடை மருதே. 1.121.8
    1312 மருதிடை நடவிய மணிவணர் பிரமரும்
    இருதுடை யகலமொ டிகலின ரினதெனக்
    கருதிடல் அரியதொர் உருவொடு பெரியதொர்
    எருதுடை யடிகள்தம் இடமிடை மருதே. 1.121.9
    1313 துவருறு விரிதுகில் உடையரும் அமணரும்
    அவருறு சிறுசொலை நயவன்மின் இடுமணல்
    கவருறு புனலிடை மருதுகை தொழுதெழும்
    அவருறு வினைகெடல் அணுகுதல் குணமே. 1.121.10
    1314 தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன்
    இடமலி பொழிலிடை மருதினை யிசைசெய்த
    படமலி தமிழிவை பரவவல் லவர்வினை
    கெடமலி புகழொடு கிளரொளி யினரே. 1.121.11

    திருச்சிற்றம்பலம்