MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.124 திருவீழிமிழலை - திருவிராகம்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1337 அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர்
    மலர்மலி குழலுமை தனையிடம் மகிழ்பவர்
    நலம்மலி யுருவுடை யவர்நகர் மிகுபுகழ்
    நிலமலி மிழலையை நினையவ லவரே. 1.124.1
    1338 இருநில மிதன்மிசை யெழில்பெறும் உருவினர்
    கருமலி தருமிகு புவிமுதல் உலகினில்
    இருளறு மதியினர் இமையவர் தொழுதெழு
    நிருபமன் மிழலையை நினையவ லவரே. 1.124.2
    1339 கலைமகள் தலைமகன் இவனென வருபவர்
    அலைமலி தருபுனல் அரவொடு நகுதலை
    இலைமலி யிதழியு மிசைதரு சடையினர்
    நிலைமலி மிழலையை நினையவ லவரே. 1.124.3
    1340 மாடமர் சனமகிழ் தருமனம் உடையவர்
    காடமர் கழுதுக ளவைமுழ வொடுமிசை
    பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில்
    நீடமர் மிழலையை நினையவ லவரே. 1.124.4
    1341 புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை
    இகழ்வுசெய் தவனுடை யெழின்மறை வழிவளர்
    முகமது சிதைதர முனிவுசெய் தவன்மிகு
    நிகழ்தரு மிழலையை நினையவ லவரே. 1.124.5
    1342 1342
    அன்றினர் அரியென வருபவர் அரிதினில்
    ஒன்றிய திரிபுரம் ஒருநொடி யினிலெரி
    சென்றுகொள் வகைசிறு முறுவல்கொ டொளிபெற
    நின்றவன் மிழலையை நினையவ லவரே. 1.124.6
    1343 கரம்பயில் கொடையினர் கடிமல ரயனதொர்
    சிரம்பயில் வறவெறி சிவனுறை செழுநகர்
    வரம்பயில் கலைபல மறைமுறை யறநெறி
    நிரம்பினர் மிழலையை நினையவ லவரே. 1.124.7
    1344 ஒருக்கிய வுணர்வினொ டொளிநெறி செலுமவர்
    அரக்கன்நன் மணிமுடி யொருபதும் இருபது
    கரக்கன நெரிதர மலரடி விரல்கொடு
    நெருக்கினன் மிழலையை நினையவ லவரே. 1.124.8
    1345 அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்
    கடிமலர் அயனரி கருதரு வகைதழல்
    வடிவுரு வியல்பினொ டுலகுகள் நிறைதரு
    நெடியவன் மிழலையை நினையவ லவரே. 1.124.9
    1346 மன்மத னெனவொளி பெறுமவர் மருதமர்
    வன்மலர் துவருடை யவர்களும் மதியிலர்
    துன்மதி யமணர்கள் தொடர்வரு மிகுபுகழ்
    நின்மலன் மிழலையை நினையவ லவரே. 1.124.10
    1347 நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள்
    வித்தக மறைமலி தமிழ்விர கனமொழி
    பத்தியில் வருவன பத்திவை பயில்வொடு
    கற்றுவல் லவருல கினிலடி யவரே. 1.124.11

    திருச்சிற்றம்பலம்