MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  



    1.126 திருக்கழுமலம் - திருத்தாளச்சதி
    பண் - வியாழக்குறிஞ்சி

    1359 பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின் றவும்பரப்
    பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முனிவர்களுஞ்
    சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னொடுஞ்
    சேர்வார்நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ்
    சந்தித்தே யிந்தப்பார் சனங்கள்நின்று தங்கணாற்
    தாமேகாணா வாழ்வாரத் தகவுசெய் தவனதிடங்
    கந்தத்தால் எண்டிக்குங் கமழ்ந்திலங்கு சந்தனக்
    காடார்பூவார் சீர்மேவுங் கழுமல வளநகரே. 1.126.1
    1360 பிச்சைக்கே யிச்சித்துப் பிசைந்தணிந்த வெண்பொடிப்
    பீடார்நீடார் மாடாரும் பிறைநுதல் அரிவையொடும்
    உச்சத்தால் நச்சிப்போல் தொடர்ந்தடர்ந்த வெங்கணே
    றூராவூரா நீள்வீதிப் பயில்வொடும் ஒலிசெயிசை
    வச்சத்தான் நச்சுச்சேர் வடங்கொள்கொங்கை மங்கைமார்
    வாராநேரே மாலாகும் வசிவல வவனதிடங்
    கச்சத்தான் மெச்சிப்பூக் கலந்திலங்கு வண்டினங்
    காரார்காரார் நீள்சோலைக் கழுமல வளநகரே. 1.126.2
    1361 திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின்
    சேரேசேரே நீராகச் செறிதரு சுரநதியோ
    டங்கைச்சேர் வின்றிக்கே அடைந்துடைந்த வெண்டலைப்
    பாலேமேலே மாலேயப் படர்வுறு மவனிறகும்
    பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கள் கொன்றையின்
    போதார்தாரே தாமேவிப் புரிதரு சடையனிடங்
    கங்கைக்கே யும்பொற்பார் கலந்துவந்த பொன்னியின்
    காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே. 1.126.3
    1362 அண்டத்தா லெண்டிக்கு மமைந்தடங்கு மண்டலத்
    தாறேவேறே வானாள்வார் அவரவ ரிடமதெலாம்
    மண்டிப்போய் வென்றிப்போர் மலைந்தலைந்த வும்பரும்
    மாறேலாதார் தாமேவும் வலிமிகு புரமெரிய
    முண்டத்தே வெந்திட்டே முடிந்திடிந்த இஞ்சிசூழ்
    மூவாமூதூர் மூதூரா முனிவுசெய் தவனதிடங்
    கண்டிட்டே செஞ்சொற்சேர் கவின்சிறந்த மந்திரக்
    காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே. 1.126.4
    1363 திக்கிற்றே வற்றற்றே திகழ்ந்திலங்கு மண்டலச்
    சீறார்வீறார் போரார்தா ரகனுட லவனெதிரே
    புக்கிட்டே வெட்டிட்டே புகைந்தெழுந்த சண்டத்தீப்
    போலேபூநீர் தீகான்மீப் புணர்தரு முயிர்கள்திறஞ்
    சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்தமங்கை செங்கதத்
    தோடேயாமே மாலோகத் துயர்களை பவனதிடங்
    கைக்கப்போ யுக்கத்தே கனன்றுமிண்டு தண்டலைக்
    காடேயோடா ஊரேசேர் கழுமல வளநகரே. 1.126.5
    1364 செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறுஞ்
    சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதுவாய்
    ஒற்றைச்சேர் முற்றல்கொம் புடைத்தடக்கை முக்கண்மிக்
    கோவாதேபாய் மாதானத் துறுபுகர் முகஇறையைப்
    பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும்
    பேராநோய்தா மேயாமைப் பிரிவுசெய் தவனதிடங்
    கற்றிட்டே யெட்டெட்டுக் கலைத்துறைக் கரைச்செலக்
    காணாதாரே சேராமெய்க் கழுமல வளநகரே. 1.126.6
    1365 பத்திப்பேர் வித்திட்டே பரந்தஐம் புலன்கள்வாய்ப்
    பாலேபோகா மேகாவா பகையறும் வகைநினையா
    முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள்வாய்
    மூடாவூடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாய்ச்
    சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள்
    சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையுமிடங்
    கத்திட்டோ ர் சட்டங்கங் கலந்திலங்கும் நற்பொருள்
    காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே. 1.126.7
    1366 செம்பைச்சேர் இஞ்சிச்சூழ் செறிந்திலங்கு பைம்பொழிற்
    சேரேவாரா வாரீசத் திரையெறி நகரிறைவன்
    இம்பர்க்கே தஞ்செய்திட் டிருந்தரன் பயின்றவெற்
    பேரார்பூநே ரோர்பாதத் தெழில்விரல் அவண்நிறுவிட்
    டம்பொற்பூண் வென்றித்தோள் அழிந்துவந்த னஞ்செய்தாற்
    காரார்கூர்வாள் வாணாளன் றருள்புரி பவனதிடங்
    கம்பத்தார் தும்பித்திண் கவுட்சொரிந்த மும்மதக்
    காரார்சேறார் மாவீதிக் கழுமல வளநகரே. 1.126.8
    1367 பன்றிக்கோ லங்கொண்டிப் படித்தடம் பயின்றிடப்
    பானாமால்தா னாமேயப் பறவையி னுருவுகொள
    ஒன்றிட்டே யம்புச்சே ருயர்ந்தபங் கயத்தவ
    னோதானோதான் அஃதுணரா துருவின தடிமுடியுஞ்
    சென்றிட்டே வந்திப்பத் திருக்களங்கொள் பைங்கணின்
    றேசால்வேறோ ராகாரந் தெரிவுசெய் தவனதிடங்
    கன்றுக்கே முன்றிற்கே கலந்திலந் நிறைக்கவுங்
    காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே. 1.126.9
    1368 தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத்
    தாமேபேணா தேநாளுஞ் சமணொடு முழல்பவரும்
    இட்டத்தா லத்தந்தா னிதன்றதென்று நின்றவர்க்
    கேயாமேவா யேதுச்சொல் லிலைமலி மருதம்பூப்
    புட்டத்தே யட்டிட்டுப் புதைக்குமெய்க்கொள் புத்தரும்
    போல்வார்தாமோ ராமேபோய்ப் புணர்வுசெய் தவனதிடங்
    கட்டிக்கால் வெட்டித்தீங் கரும்புதந்த பைம்புனற்
    காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே. 1.126.10
    1369 கஞ்சத்தேன் உண்டிட்டே களித்துவண்டு சண்பகக்
    கானேதேனே போராருங் கழுமல நகரிறையைத்
    தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்தநற் கலைத்துறை
    தாமேபோல்வார் தேனேரார் தமிழ்விர கனமொழிகள்
    எஞ்சத்தேய் வின்றிக்கே இமைத்திசைத் தமைத்தகொண்
    டேழேயேழே நாலேமூன் றியலிசை இசையியல்பா
    வஞ்சத்தேய் வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர்
    மார்பேசேர்வாள் வானோர்சீர் மதிநுதல் மடவரலே. 1.126.11

    திருச்சிற்றம்பலம்