MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.129 திருக்கழுமலம்
    பண் - மேகராகக்குறிஞ்சி

    1383 சேவுயருந் திண்கொடியான் திருவடியே
    சரணென்று சிறந்தவன்பால்
    நாவியலும் மங்கையொடு நான்முகன்றான்
    வழிபட்ட நலங்கொள்கோயிற்
    வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச்
    செங்குமுதம் வாய்கள்காட்டக்
    காவியிருங் கருங்குவளை கருநெய்தல்
    கண்காட்டுங் கழுமலமே. 1.129.1
    1384 பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடுடைய
    மலைச்செல்வி பிரியாமேனி
    அருந்தகைய சுண்ணவெண்ணீ றலங்கரித்தான்
    அமரர்தொழ வமருங்கோயில்
    தருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறும்
    இறைவனது தன்மைபாடிக்
    கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப்
    பாட்டயருங் கழுமலமே. 1.129.2
    1385 அலங்கல்மலி வானவருந் தானவரும்
    அலைகடலைக் கடையப்பூதங்
    கலங்கவெழு கடுவிடமுண் டிருண்டமணி
    கண்டத்தோன் கருதுங்கோயில்
    விலங்கலமர் புயன்மறந்து மீன்சனிபுக்
    கூன்சலிக்குங் காலத்தானுங்
    கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய
    மெய்யர்வாழ் கழுமலமே. 1.129.3
    1386 பாரிதனை நலிந்தமரர் பயமெய்தச்
    சயமெய்தும் பரிசுவெம்மைப்
    போரிசையும் புரமூன்றும் பொன்றவொரு
    சிலைவளைத்தோன் பொருந்துங்கோயில்
    வாரிசைமென் முலைமடவார் மாளிகையின்
    சூளிகைமேல் மகப்பாராட்டக்
    காரிசையும் விசும்பியங்குங் கணங்கேட்டு
    மகிழ்வெய்துங் கழுமலமே. 1.129.4
    1387 ஊர்கின்ற அரவமொளி விடுதிங்க
    ளொடுவன்னி மத்தமன்னும்
    நீர்நின்ற கங்கைநகு வெண்டலைசேர்
    செஞ்சடையான் நிகழுங்கோயில்
    ஏர்தங்கி மலர்நிலவி யிசைவெள்ளி
    மலையென்ன நிலவிநின்ற
    கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு
    சுதைமாடக் கழுமலமே. 1.129.5
    1388 தருஞ்சரதந் தந்தருளென் றடிநினைந்து
    தழலணைந்து தவங்கள்செய்த
    பெருஞ்சதுரர் பெயலர்க்கும் பீடார்தோ
    ழமையளித்த பெருமான்கோயில்
    அரிந்தவய லரவிந்த மதுவுகுப்ப
    அதுகுடித்துக் களித்துவாளை
    கருஞ்சகடம் இளகவளர் கரும்பிரிய
    அகம்பாயுங் கழுமலமே. 1.129.6
    1389 புவிமுதலைம் பூதமாய்ப் புலனைந்தாய்
    நிலனைந்தாய்க் கரணம்நான்காய்
    அவையவைசேர் பயனுருவா யல்லவுரு
    வாய்நின்றான் அமருங்கோயில்
    தவமுயல்வோர் மலர்பறிப்பத் தாழவிடு
    கொம்புதைப்பக் கொக்கின்காய்கள்
    கவணெறிகற் போற்சுனையின் கரைசேரப்
    புள்ளிரியுங் கழுமலமே. 1.129.7
    1390 அடல்வந்த வானவரை யழித்துலகு
    தெழித்துழலும் அரக்கர்கோமான்
    மிடல்வந்த இருபதுதோள் நெரியவிரல்
    பணிகொண்டோ ன் மேவுங்கோயில்
    நடவந்த உழவரிது நடவொணா
    வகைபரலாய்த் தென்றுதுன்று
    கடல்வந்த சங்கீன்ற முத்துவயற்
    கரைகுவிக்குங் கழுமலமே. 1.129.8
    1391 பூமகள்தன் கோனயனும் புள்ளினொடு
    கேழலுரு வாகிப்புக்கிட்
    டாமளவுஞ் சென்றுமுடி யடிகாணா
    வகைநின்றான் அமருங்கோயில்
    பாமருவும் கலைப்புலவோர் பன்மலர்கள்
    கொண்டணிந்து பரிசினாலே
    காமனைகள் பூரித்துக் களிகூர்ந்து
    நின்றேத்துங் கழுமலமே. 1.129.9
    1392 குணமின்றிப் புத்தர்களும் பொய்த்தவத்தை
    மெய்த்தவமாய் நின்றுகையில்
    உணல்மருவுஞ் சமணர்களு முணராத
    வகைநின்றான் உறையுங்கோயில்
    மணமருவும் வதுவையொலி விழவினொலி
    யிவையிசைய மண்மேல்தேவர்
    கணமருவும் மறையினொலி கீழ்ப்படுக்க
    மேல்படுக்குங் கழுமலமே. 1.129.10
    1393 கற்றவர்கள் பணிந்தேத்துங் கழுமலத்து
    ளீசன்றன் கழல்மேல்நல்லோர்
    நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம்
    பந்தன்றான் நயந்துசொன்ன
    சொற்றுணையோ ரைந்தினொடைந் திவைவல்லார்
    தூமலராள் துணைவராகி
    முற்றுலக மதுவாண்டு முக்கணான்
    அடிசேர முயல்கின்றாரே. 1.129.11

    திருச்சிற்றம்பலம்