MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.130 திருவையாறு
    பண் - மேகராகக்குறிஞ்சி

    1394 புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
    அறிவழிந்திட் டைம்மே஧லுந்தி
    அலமந்த போதாக அஞ்சேலென்
    றருள்செய்வான் அமருங்கோயில்
    வலம்வந்த மடவார்கள் நடமாட
    முழவதிர மழையென்றஞ்சிச்
    சிலமந்தி யலமந்து மரமேறி
    முகில்பார்க்குந் திருவையாறே. 1.130.1
    1395 விடலேறு படநாகம் அரைக்கசைத்து
    வெற்பரையன் பாவையோடும்
    அடலேறொன் றதுவேறி அஞ்சொலீர்
    பலியென்னு மடிகள்கோயில்
    கடலேறித் திரைமோதிக் காவிரியி
    னுடன்வந்து கங்குல்வைகித்
    திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங்
    கீன்றலைக்குந் திருவையாறே. 1.130.2
    1396 கங்காளர் கயிலாய மலையாளர்
    கானப்பே ராளர்மங்கை
    பங்காளர் திரிசூலப் படையாளர்
    விடையாளர் பயிலுங்கோயில்
    கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால்
    இறகுலர்த்திக் கூதல்நீங்கி
    செங்கால்நன் வெண்குருகு பைங்கானல்
    இரைதேருந் திருவையாறே. 1.130.3
    1397 ஊன்பாயு முடைதலைக்கொண் டூரூரின்
    பலிக்குழல்வார் உமையாள்பங்கர்
    தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார்
    தழலுருவர் தங்குங்கோயில்
    மான்பாய வயலருகே மரமேறி
    மந்திபாய் மடுக்கள்தோறுந்
    தேன்பாய மீன்பாய செழுங்கமல
    மொட்டலருந் திருவையாறே. 1.130.4
    1398 நீரோடு கூவிளமும் நிலாமதியும்
    வெள்ளெருக்கும் நிறைந்தகொன்றைத்
    தாரோடு தண்கரந்தைச் சடைக்கணிந்த
    தத்துவனார் தங்குங்கோயில்
    காரோடி விசும்பளந்து கடிநாறும்
    பொழிலணைந்த கமழ்தார்வீதித்
    தேரோடும் அரங்கேறிச் சேயிழையார்
    நடம்பயிலுந் திருவையாறே. 1.130.5
    1399 வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்
    நெறிகாட்டும் விகிர்தனாகிப்
    பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த
    புண்ணியனார் நண்ணுங்கோயில்
    காந்தார மிசையமைத்துக் காரிகையார்
    பண்பாடக் கவினார்வீதித்
    தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார்
    நடமாடுந் திருவையாறே. 1.130.6
    1400 நின்றுலா நெடுவிசும்பில் நெருக்கிவரு
    புரமூன்றும் நீள்வாயம்பு
    சென்றுலாம் படிதொட்ட சிலையாளி
    மலையாளி சேருங்கோயில்
    குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச
    மலர்பாய்ந்து வாசமல்கு
    தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு
    கண்வளருந் திருவையாறே. 1.130.7
    1401 அஞ்சாதே கயிலாய மலையெடுத்த
    அரக்கர்கோன் தலைகள்பத்தும்
    மஞ்சாடு தோள்நெரிய அடர்த்தவனுக்
    கருள்புரிந்த மைந்தர்கோயில்
    இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ
    இளமேதி இரிந்தங்கோடிச்
    செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல
    வயல்படியுந் திருவையாறே. 1.130.8
    1402 மேலோடி விசும்பணவி வியன்நிலத்தை
    மிகவகழ்ந்து மிக்குநாடும்
    மாலோடு நான்முகனு மறியாத
    வகைநின்றான் மன்னுங்கோயில்
    கோலோடக் கோல்வளையார் கூத்தாடக்
    குவிமுலையார் முகத்தினின்று
    சேலோடச் சிலையாடச் சேயிழையார்
    நடமாடுந் திருவையாறே. 1.130.9
    1403 குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு
    சாக்கியருங் குணமொன்றில்லா
    மிண்டாடு மிண்டருரை கேளாதே
    யாளாமின் மேவித்தொண்டீர்
    எண்டோ ளர் முக்கண்ணர் எம்மீசர்
    இறைவரினி தமருங்கோயில்
    செண்டாடு புனல்பொன்னிச் செழுமணிகள்
    வந்தலைக்குந் திருவையாறே. 1.130.10
    1404 அன்னமலி பொழில்புடைசூழ் ஐயாற்றெம்
    பெருமானை அந்தண்காழி
    மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான
    சம்பந்தன் மருவுபாடல்
    இன்னிசையா லிவைபத்தும் இசையுங்கால்
    ஈசனடி யேத்துவார்கள்
    தன்னிசையோ டமருலகில் தவநெறிசென்
    றெய்துவார் தாழாதன்றே. 1.130.11

    திருச்சிற்றம்பலம்