MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.131 திருமுதுகுன்றம்
    பண் - மேகராகக்குறிஞ்சி

    1405 மெய்த்தாறு சுவையும் ஏழிசையும்
    எண்குணங்களும் விரும்பும்நால்வே
    தத்தாலும் அறிவொண்ணா நடைதெளியப்
    பளிங்கேபோல் அரிவைபாகம்
    ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன்
    கருதுமூர் உலவுதெண்ணீர்
    முத்தாறு வெதிருதிர நித்திலம்வா
    ரிக்கொழிக்கும் முதுகுன்றமே. 1.131.1
    1406 வேரிமிகு குழலியொடு வேடுவனாய்
    வெங்கானில் விசயன்மேவு
    போரின்மிகு பொறையளந்து பாசுபதம்
    புரிந்தளித்த புராணர்கோயில்
    காரின்மலி கடிபொழில்கள் கனிகள்பல
    மலருதிர்த்துக் கயமுயங்கி
    மூரிவளம் கிளர்தென்றல் திருமுன்றிற்
    புகுந்துலவு முதுகுன்றமே. 1.131.2
    1407 தக்கனது பெருவேள்வி சந்திரனிந்
    திரனெச்சன் அருக்கன்அங்கி
    மிக்கவிதா தாவினொடும் விதிவழியே
    தண்டித்த விமலர்கோயில்
    கொக்கினிய கொழும்வருக்கைக் கதலிகமு
    குயர்தெங்கின் குவைகொள்சோலை
    முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா
    நீள்வயல்சூழ் முதுகுன்றமே. 1.131.3
    1408 வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய
    விறலழிந்து விண்ணுளோர்கள்
    செம்மலரோன் இந்திரன்மால் சென்றிரப்பத்
    தேவர்களே தேரதாக
    மைம்மருவு மேருவிலு மாசுணநாண்
    அரியெரிகால் வாளியாக
    மும்மதிலும் நொடியளவிற் பொடிசெய்த
    முதல்வனிடம் முதுகுன்றமே. 1.131.4
    1409 இழைமேவு கலையல்குல் ஏந்திழையாள்
    ஒருபாலா யொருபாலெள்கா
    துழைமேவும் உரியுடுத்த ஒருவனிருப்
    பிடமென்பர் உம்பரோங்கு
    கழைமேவு மடமந்தி மழைகண்டு
    மகவினொடும் புகவொண்கல்லின்
    முழைமேவு மால்யானை இரைதேரும்
    வளர்சாரல் முதுகுன்றமே. 1.131.5
    1410 நகையார்வெண் டலைமாலை முடிக்கணிந்த
    நாதனிடம் நன்முத்தாறு
    வகையாரும் வரைப்பண்டங் கொண்டிரண்டு
    கரையருகு மறியமோதி
    தகையாரும் வரம்பிடறிச் சாலிகழு
    நீர்குவளை சாயப்பாய்ந்து
    முகையார்செந் தாமரைகள் முகம்மலர
    வயல்தழுவு முதுகுன்றமே. 1.131.6
    1411 அறங்கிளரும் நால்வேத மாலின்கீழ்
    இருந்தருளி யமரர்வேண்ட
    நிறங்கிளர்செந் தாமரையோன் சிரமைந்தின்
    ஒன்றறுத்த நிமலர்கோயில்
    திறங்கொள்மணித் தரளங்கள் வரத்திரண்டங்
    கெழிற்குறவர் சிறுமிமார்கள்
    முறங்களினாற் கொழித்துமணி செலவிலக்கி
    முத்துலைப்பெய் முதுகுன்றமே. 1.131.7
    1411 கதிரொளிய நெடுமுடிபத் துடையகடல்
    இலங்கையர்கோன் கண்ணும்வாயும்
    பிதிரொளிய கனல்பிறங்கப் பெருங்கயிலை
    மலையைநிலை பெயர்த்தஞான்று
    மதிலளகைக் கிறைமுரல மலரடியொன்
    றூன்றிமறை பாடவாங்கே
    முதிரொளிய சுடர்நெடுவாள் முன்னீந்தான்
    வாய்ந்தபதி முதுகுன்றமே. 1.131.8
    1413 பூவார்பொற் றவிசின்மிசை யிருந்தவனும்
    பூந்துழாய் புனைந்தமாலும்
    ஓவாது கழுகேன மாயுயர்ந்தாழ்ந்
    துறநாடி யுண்மைகாணாத்
    தேவாருந் திருவுருவன் சேருமலை
    செழுநிலத்தை மூடவந்த
    மூவாத முழங்கொலிநீர் கீழ்தாழ
    மேலுயர்ந்த முதுகுன்றமே. 1.131.9
    1414 மேனியில்சீ வரத்தாரும் விரிதருதட்
    டுடையாரும் விரவலாகா
    ஊனிகளா யுள்ளார்சொற் கொள்ளாதும்
    உள்ளுணர்ந்தங் குய்மின்தொண்டீர்
    ஞானிகளா யுள்ளார்கள் நான்மறையை
    முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று
    மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து
    தவம்புரியும் முதுகுன்றமே. 1.131.10
    1415 முழங்கொலிநீர் முத்தாறு வலஞ்செய்யும்
    முதுகுன்றத் திறையைமூவாப்
    பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்துடைய
    கழுமலமே பதியாக்கொண்டு
    தழங்கெரிமூன் றோம்புதொழில் தமிழ்ஞான
    சம்பந்தன் சமைத்தபாடல்
    வழங்குமிசை கூடும்வகை பாடுமவர்
    நீடுலகம் ஆள்வர்தாமே. 1.131.11

    திருச்சிற்றம்பலம்