MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.132 திருவீழிமிழலை
    பண் - மேகராகக்குறிஞ்சி

    1416 ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங்
    கீரிருவர்க் கிரங்கிநின்று
    நேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர்
    நெறியளித்தோன் நின்றகோயில்
    பாரிசையும் பண்டிதர்கள் பன்னா஡ளும்
    பயின்றோது மோசைகேட்டு
    வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள்
    பொருள்சொல்லும் மிழலையாமே. 1.132.1
    1417 பொறியரவ மதுசுற்றிப் பொருப்பேமத்
    தாகப்புத் தேளிர்கூடி
    மறிகடலைக் கடைந்திட்ட விடமுண்ட
    கண்டத்தோன் மன்னுங்கோயில்
    செறியிதழ்த்தா மரைத்தவிசிற் றிகழ்ந்தோங்கு
    மிலைக்குடைக்கீழ்ச் செய்யார்செந்நெல்
    வெறிகதிர்ச்சா மரையிரட்ட இளவன்னம்
    வீற்றிருக்கும் மிழலையாமே. 1.132.2
    1418 எழுந்துலகை நலிந்துழலும் அவுணர்கள்தம்
    புரமூன்றும் எழிற்கண்நாடி
    உழந்துருளும் அளவையினொள் ளெரிகொளவெஞ்
    சிலைவளைத்தோன் உறையுங்கோயில்
    கொழுந்தரளம் நகைகாட்டக் கோகநதம்
    முகங்காட்டக் குதித்துநீர்மேல்
    விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம்
    வாய்காட்டும் மிழலையாமே. 1.132.3
    1419 உரைசேரும் எண்பத்து நான்குநூ
    றாயிரமாம் யோனிபேதம்
    நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய்
    அங்கங்கே நின்றான்கோயில்
    வரைசேரும் முகில்முழவ மயில்கள்பல
    நடமாட வண்டுபாட
    விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள்
    கையேற்கும் மிழலையாமே. 1.132.4
    1420 காணுமா றரியபெரு மானாகிக்
    காலமாய்க் குணங்கள்மூன்றாய்ப்
    பேணுமூன் றுருவாகிப் பேருலகம்
    படைத்தளிக்கும் பெருமான்கோயில்
    தாணுவாய் நின்றபர தத்துவனை
    உத்தமனை இறைஞ்சீரென்று
    வேணுவார் கொடிவிண்ணோர் தமைவிளிப்ப
    போலோங்கு மிழலையாமே. 1.132.5
    1421 அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்
    றைம்புலனும் அடக்கிஞானப்
    புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத்
    துள்ளிருக்கும் புராணர்கோயில்
    தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க்
    கந்திகழச் சலசத்தீயுள்
    மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட
    மணஞ்செய்யும் மிழலையாமே. 1.132.6
    1422 ஆறாடு சடைமுடியன் அனலாடு
    மலர்க்கையன் இமயப்பாவை
    கூறாடு திருவுருவன் கூத்தாடுங்
    குணமுடையோன் குளிருங்கோயில்
    சேறாடு செங்கழுநீர்த் தாதாடி
    மதுவுண்டு சிவந்தவண்டு
    வேறாய உருவாகிச் செவ்வழிநற்
    பண்பாடும் மிழலையாமே. 1.132.7
    1423 கருப்பமிகும் உடலடர்த்துக் காலூன்றிக்
    கைமறித்துக் கயிலையென்னும்
    பொருப்பெடுக்க லுறுமரக்கன் பொன்முடிதோள்
    நெரித்தவிரற் புனிதர்கோயில்
    தருப்பமிகு சலந்தரன்றன் உடல்தடிந்த
    சக்கரத்தை வேண்டியீண்டு
    விருப்பொடுமால் வழிபாடு செய்யவிழி
    விமானஞ்சேர் மிழலையாமே. 1.132.8
    1424 செந்தளிர்மா மலரோனுந் திருமாலும்
    ஏனமொடு அன்னமாகி
    அந்தமடி காணாதே அவரேத்த
    வெளிப்பட்டோ ன் அமருங்கோயில்
    புந்தியினான் மறைவழியே புற்பரப்பி
    நெய்சமிதை கையிற்கொண்டு
    வெந்தழலின் வேட்டுலகின் மிகவளிப்போர்
    சேருமூர் மிழலையாமே. 1.132.9
    1425 எண்ணிறந்த அமணர்களும் இழிதொழில்சேர்
    சாக்கியரும் என்றுந்தன்னை
    நண்ணரிய வகைமயக்கித் தன்னடியார்க்
    கருள்புரியும் நாதன்கோயில்
    பண்ணமரும் மென்மொழியார் பாலகரைப்
    பாராட்டும் ஓசைகேட்டு
    விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோ
    டும்மிழியும் மிழலையாமே. 1.132.10
    1426 மின்னியலும் மணிமாடம் மிடைவீழி
    மிழலையான் விரையார்பாதஞ்
    சென்னிமிசைக் கொண்டொழுகுஞ் சிரபுரக்கோன்
    செழுமறைகள் பயிலும்நாவன்
    பன்னியசீர் மிகுஞான சம்பந்தன்
    பரிந்துரைத்த பத்துமேத்தி
    இன்னிசையாற் பாடவல்லார் இருநிலத்தில்
    ஈசனெனும் இயல்பினோரே. 1.132.11

    திருச்சிற்றம்பலம்