MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.136 திருத்தருமபுரம்
    பண் - யாழ்மூரி

    1459 மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
    நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
    பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
    அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்
    வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
    இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே
    தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
    எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே. 1.136.1
    1460 பொங்கு நடைப்புக லில்விடை யாமவ ரூர்திவெண்
    பொடி யணி தடங் கொள்மார் புபூண நூல்புரள
    மங்குலி டைத்தவ ழும்மதி சூடுவ ராடுவர்
    வளங் கிளர் புன லரவம் வைகிய சடையர்
    சங்கு கடற்றிரை யாலுதை யுண்டுச ரிந்திரிந்
    தொசிந் தசைந் திசைந்து சேரும் வெண்மணற் குவைமேல்
    தங்கு கதிர்மணி நித்தில மெல்லிரு ளொல்கநின்
    றிலங் கொளிந் நலங் கெழிற் றருமபு ரம்பதியே. 1.136.2
    1461 விண்ணுறு மால்வரை போல்விடை யேறுவர் ஆறுசூ
    டுவர் விரி சுரி யொளிகொள் தோடுநின் றிலங்கக்
    கண்ணுற நின்றொளி ருங்கதிர் வெண்மதிக் கண்ணியர்
    கழிந் தவ ரிழிந் திடும் முடைதலை கலனாப்
    பெண்ணுற நின்றவர் தம்முரு வம்மயன் மால்தொழவ்
    வரி வையைப் பிணைந் திணைந் தணைந்ததும் பிரியார்
    தண்ணிதழ் முல்லையொ டெண்ணிதழ் மௌவல் மருங்கலர்
    கருங் கழிந் நெருங் குநற் றரும புரம்பதியே. 1.136.3
    1462 வாருறு மென்முலை நன்னுதல் ஏழையொ டாடுவர்
    வளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர்
    காருற நின்றல ரும்மலர்க் கொன்றை யங்கண்ணியர்
    கடு விடை கொடி வெடிகொள் காடுறை பதியர்
    பாருற விண்ணுல கம்பர வப்படு வோரவர்
    படு தலைப் பலி கொளல் பரிபவந் நினையார்
    தாருறு நல்லர வம்மலர் துன்னிய தாதுதிர்
    தழை பொழின் மழைந் நுழை தருமபு ரம்பதியே. 1.136.4
    1463 நேரும வர்க்குண ரப்புகி லில்லைநெ டுஞ்சடைக்
    கடும் புனல் படர்ந் திடம் படுவதொர் நிலையர்
    பேரும வர்க்கெனை யாயிரம் முன்னைப்பி றப்பிறப்
    பிலா தவ ருடற் றடர்த்த பெற்றி யாரறிவார்
    ஆரம வர்க்கழல் வாயதொர் நாகம ழஃகுறவ்
    வெழுஃ கொழும் மலர் கொள்பொன் னிதழிநல் லலங்கல்
    தாரம வர்க்கிம வான்மகள் ஊர்வது போர்விடை
    கடி படு செடி பொழிற் றருமபு ரம்பதியே. 1.136.5
    1464 கூழையங் கோதைகு லாயவள் தம்பிணை புல்கமல்
    குமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத் துவர்வாய்
    மாழையொண் கண்மட வாளையொர் பாகம கிழ்ந்தவர்
    வலம் மலி படை விடை கொடிகொ டும்மழுவாள்
    யாழையும் மெள்கிட வேழிசை வண்டுமு ரன்றினந்
    துவன் றிமென் சிறஃ கறை யுறந்நறவ் விரியும்நற்
    தாழையும் ஞாழலும் நீடிய கானலி னள்ளிசைப்
    புள் ளினந் துயில் பயில் தருமபு ரம்பதியே. 1.136.6
    1465 தேமரு வார்குழல் அன்ன நடைப்பெடை மான்விழித்
    திருந் திழை பொருந்து மேனி செங்கதிர் விரிய
    தூமரு செஞ்சடை யிற்றுதை வெண்மதி துன்றுகொன்றை
    தொல் புனல் சிரங் கரந் துரித்த தோலுடையர்
    காமரு தண்கழி நீடிய கானல கண்டகங்
    கடல் அடை கழி யிழிய முண்ட கத்தயலே
    தாமரை சேர்குவ ளைப்படு கிற்கழு நீர்மலர்
    வெறி கமழ் செறி வயற் றருமபு ரம்பதியே. 1.136.7
    1466 தூவண நீறக லம்பொலி யவ்விரை புல்கமல்
    குமென் மலர் வரை புரை திரள்பு யம்மணிவர்
    கோவண மும்முழை யின்னத ளும்முடை யாடையர்
    கொலை மலி படையொர் சூல மேந்திய குழகர்
    பாவண மாவல றத்தலை பத்துடை யவ்வரக்
    கனவ் வலியொர் கவ்வை செய் தருள்புரி தலைவர்
    தாவண ஏறுடை யெம்மடி கட்கிடம் வன்றடங்
    கடல் லிடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே. 1.136.8
    1467 வார்மலி மென்முலை மாதொரு பாகம தாகுவர்
    வளங் கிளர் மதி யரவம் வைகிய சடையர்
    கூர்மலி சூலமும் வெண்மழு வும்மவர் வெல்படை
    குனி சிலை தனிம் மலைய தேந்திய குழகர்
    ஆர்மலி ஆழிகொள் செல்வனும் அல்லி கொள்தாமரைம்
    மிசை யவன் அடிம் முடி யளவு தாமறியார்
    தார்மலி கொன்றைய லங்கலு கந்தவர் தங்கிடந்
    தடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே. 1.136.9
    1468 புத்தர் கடத்துவர் மொய்த்துறி புல்கிய கையர்பொய்ம்
    மொழிந் தழிவில் பெற்றி யுற்ற நற்றவர் புலவோர்
    பத்தர்கள் அத்தவ மெய்ப்பய னாகவு கந்தவர்
    நிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர்
    முத்தன வெண்ணகை யொண்மலை மாதுமை பொன்னணி
    புணர் முலை யிணை துணை யணைவ தும்பிரியார்
    தத்தரு வித்திர ளுந்திய மால்கட லோதம்வந்
    தடர்ந் திடும் தடம் பொழிற் றருமபு ரம்பதியே. 1.136.10
    1469 பொன்னெடு நன்மணி மாளிகை சூழ்விழ வம்மலி
    பொரு புனல் திரு வமர் புகலியென் றுலகிற்
    தன்னொடு நேர்பிற வில்பதி ஞானசம் பந்தனஃ
    துசெந் தமிழ்த் தடங் கடற் றருமபு ரம்பதியைப்
    பின்னெடு வார்சடை யிற்பிறை யும்மர வும்முடை
    யவன் பிணை துணை கழல்கள் பேணுத லுரியார்
    இன்னெடு நன்னுல கெய்துவ ரெய்திய போகமும்
    உறு வர்க ளிடர் பிணி துயரணை விலரே. 1.136.11

    திருச்சிற்றம்பலம்

    திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த
    தேவாரப் பதிகங்கள்
    முதல் திருமுறை முற்றும்.