MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.18 திருமருகல் - விடந்தீர்த்ததிருப்பதிகம் (186-196)
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    186 சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
    விடையா யெனுமால் வெருவா விழுமால்
    மடையார் குவளை மலரும் மருகல்
    உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே. 01
    187 சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்
    முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
    கொந்தார் குவளை குலவும் மருகல்
    எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே. 02
    188 அறையார் கழலும் மழல்வா யரவும்
    பிறையார் சடையும் முடையாய் பெரிய
    மறையார் மருகல் மகிழ்வா யிவளை
    இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே. 03
    189 ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்
    பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
    மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை
    மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே. 04
    190 துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன
    மணிநீ லகண்ட முடையாய் மருகல்
    கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்
    அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே. 05
    191 பலரும் பரவப் படுவாய் சடைமேல்
    மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
    புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்
    தலரும் படுமோ அடியா ளிவளே. 06
    192 வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா
    எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
    மழுவா ளுடையாய் மருகல் பெருமான்
    தொழுவா ளிவளைத் துயராக் கினையே. 07
    193 இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத்
    துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்
    வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்
    அலங்கல் லிவளை அலராக் கினையே. 08
    194 எரியார் சடையும் மடியும் மிருவர்
    தெரியா ததோர்தீத் திரளா யவனே
    மரியார் பிரியா மருகற் பெருமான்
    அரியாள் இவளை அயர்வாக் கினையே. 09
    195 அறிவில் சமணும் மலர்சாக் கியரும்
    நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்
    மறியேந் துகையாய் மருகற் பெருமான்
    நெறியார் குழலி நிறைநீக் கினையே. 10
    196 வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்
    உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்
    இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார்
    வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே. 11

    திருச்சிற்றம்பலம்