MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.19 திருநெல்லிக்கா (197-207)
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    197 அறத்தா லுயிர்கா வலமர்ந் தருளி
    மறத்தால் மதில்மூன் றுடன்மாண் பழித்த
    திறத்தால் தெரிவெய் தியதீ வெண்டிங்கள்
    நிறத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 01
    198 பதிதா னிடுகா டுபைங்கொன் றைதொங்கல்
    மதிதா னதுசூ டியமைந் தனுந்தான்
    விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும்
    நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 02
    199 நலந்தா னவன்நான் முகன்றன் தலையைக்
    கலந்தா னதுகொண் டகபா லியுந்தான்
    புலந்தான் புகழா லெரிவிண் புகழும்
    நிலந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 03
    200 தலைதா னதுஏந் தியதம் மடிகள்
    கலைதான் திரிகா டிடம்நா டிடமா
    மலைதா னெடுத்தான் மதில்மூன் றுடைய
    நிலைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 04
    201 தவந்தான் கதிதான் மதிவார் சடைமேல்
    உவந்தான் சுறவேந் தனுரு வழியச்
    சிவந்தான் செயச்செய் துசெறுத் துலகில்
    நிவந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 05
    202 வெறியார் மலர்க்கொன் றையந்தார் விரும்பி
    மறியார் மலைமங் கைமகிழ்ந் தவன்றான்
    குறியாற் குறிகொண் டவர்போய்க் குறுகும்
    நெறியான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 06
    203 பிறைதான் சடைச்சேர்த் தியஎந் தைபெம்மான்
    இறைதான் இறவாக் கயிலை மலையான்
    மறைதான் புனலொண் மதிமல் குசென்னி
    நிறைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 07
    204 மறைத்தான் பிணிமா தொருபா கந்தன்னை
    மிறைத்தான் வரையா லரக்கன் மிகையைக்
    குறைத்தான் சடைமேற் குளிர்கோல் வளையை
    நிறைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 08
    205 தழல்தா மரையான் வையந்தா யவனுங்
    கழல்தான் முடிகா ணியநா ணொளிரும்
    அழல்தான் அடியார்க் கருளாய்ப் பயக்கும்
    நிழல்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 09
    206 கனத்தார் திரைமாண் டழற்கான் றநஞ்சை
    எனத்தா வெனவாங் கியதுண் டகண்டன்
    மனத்தாற் சமண்சாக் கியர்மாண் பழிய
    நினைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 10
    207 புகரே துமிலா தபுத்தே ளுலகின்
    நிகரா நெல்லிக்கா வுள்நிலா யவனை
    நகரா நலஞா னசம்பந் தன்சொன்ன
    பகர்வா ரவர்பா வமிலா தவரே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - நெல்லிவனேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்