MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.20 திருஅழுந்தூர் (208-218)
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    208 தொழுமா றுவல்லார் துயர்தீ ரநினைந்
    தெழுமா றுவல்லார் இசைபா டவிம்மி
    அழுமா றுவல்லார் அழுந்தை மறையோர்
    வழிபா டுசெய்மா மடம்மன் னினையே. 01
    209 கடலே றியநஞ் சமுதுண் டவனே
    உடலே உயிரே உணர்வே யெழிலே
    அடலே றுடையாய் அழுந்தை மறையோர்
    விடலே தொழமா மடம்மே வினையே. 02
    210 கழிகா டலனே கனலா டலினாய்
    பழிபா டிலனே யவையே பயிலும்
    அழிபா டிலராய் அழுந்தை மறையோர்
    வழிபா டுசெய்மா மடம்மன் னினையே. 03
    211 வானே மலையே யெனமன் னுயிரே
    தானே தொழுவார் தொழுதாள் மணியே
    ஆனே சிவனே அழுந்தை யவரெம்
    மானே யெனமா மடம்மன் னினையே. 04
    212 அலையார் புனல்சூழ் அழுந்தைப் பெருமான்
    நிலையார் மறியும் நிறைவெண் மழுவும்
    இலையார் படையும் மிவையேந் துசெல்வ
    நிலையா வதுகொள் கெனநீ நினையே. 05
    213 நறவார் தலையின் நயவா வுலகிற்
    பிறவா தவனே பிணியில் லவனே
    அறையார் கழலாய் அழுந்தை மறையோர்
    மறவா தெழமா மடம்மன் னினையே. 06
    214 தடுமா றுவல்லாய் தலைவா மதியம்
    சுடுமா றுவல்லாய் சுடரார் சடையில்
    அடுமா றுவல்லாய் அழுந்தை மறையோர்
    நெடுமா நகர்கை தொழநின் றனையே. 07
    215 பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறுங்
    கரியாய் கரிகா டுயர்வீ டுடையாய்
    அரியாய் எளியாய் அழுந்தை மறையோர்
    வெரியார் தொழமா மடம்மே வினையே. 08
    216 மணீநீள் முடியான் மலையை அரக்கன்
    தணியா தெடுத்தான் உடலந் நெரித்த
    அணியார் விரலாய் அழுந்தை மறையோர்
    மணிமா மடம்மன் னியிருந் தனையே. 09
    217 முடியார் சடையாய் முனநா ளிருவர்
    நெடியான் மலரான் நிகழ்வா லிவர்கள்
    அடிமே லறியார் அழுந்தை மறையோர்
    படியாற் றொழமா மடம்பற் றினையே. 10
    218 அருஞா னம்வல்லார் அழுந்தை மறையோர்
    பெருஞா னமுடைப் பெருமா னவனைத்
    திருஞா னசம்பந் தனசெந் தமிழ்கள்
    உருஞா னமுண்டாம் உணர்ந்தார் தமக்கே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வேதபுரீசுவரர், தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்