MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.21 திருக்கழிப்பாலை
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    219 புனலா டியபுன் சடையாய் அரணம்
    அனலா கவிழித் தவனே அழகார்
    கனலா டலினாய் கழிப்பா லையுளாய்
    உனவார் கழல்கை தொழுதுள் குதுமே. 01
    220 துணையா கவொர்தூ வளமா தினையும்
    இணையா கவுகந் தவனே இறைவா
    கணையால் எயிலெய் கழிப்பா லையுளாய்
    இணையார் கழலேத் தவிடர் கெடுமே. 02
    221 நெடியாய் குறியாய் நிமிர்புன் சடையின்
    முடியாய் சுடுவெண் பொடிமுற் றணிவாய்
    கடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
    அடியார்க் கடையா அவலம் மவையே. 03
    222 எளியாய் அரியாய் நிலம்நீ ரொடுதீ
    வளிகா யமென வெளிமன் னியதூ
    ஒளியாய் உனையே தொழுதுன் னுமவர்க்
    களியாய் கழிப்பா லையமர்ந் தவனே. 04
    223 நடநண் ணியொர்நா கமசைத் தவனே
    விடநண் ணியதூ மிடறா விகிர்தா
    கடல்நண் ணுகழிப் பதிகா வலனே
    உடன்நண் ணிவணங் குவனுன் னடியே. 05
    224 பிறையார் சடையாய் பெரியாய் பெரியம்
    மறையார் தருவாய் மையினா யுலகிற்
    கறையார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
    இறையார் கழலேத் தவிடர் கெடுமே. 06
    225 முதிருஞ் சடையின் முடிமேல் விளங்குங்
    கதிர்வெண் பிறையாய் கழிப்பா லையுளாய்
    எதிர்கொள் மொழியால் இரந்தேத் துமவர்க்
    கதிரும் வினையா யினஆ சறுமே. 07
    226 எரியார் கணையால் எயிலெய் தவனே
    விரியார் தருவீழ் சடையாய் இரவிற்
    கரிகா டலினாய் கழிப்பா லையுளாய்
    உரிதா கிவணங் குவனுன் னடியே. 08
    227 நலநா ரணன்நான் முகன்நண் ணலுறக்
    கனலா னவனே கழிப்பா லையுளாய்
    உனவார் கழலே தொழுதுன் னுமவர்க்
    கிலதாம் வினைதான் எயிலெய் தவனே. 09
    228 தவர்கொண் டதொழிற் சமண்வே டரொடுந்
    துவர்கொண் டனநுண் துகிலா டையரும்
    அவர்கொண் டனவிட் டடிகள் ளுறையும்
    உவர்கொண் டகழிப் பதியுள் குதுமே. 10
    229 கழியார் பதிகா வலனைப் புகலிப்
    பழியா மறைஞா னசம்பந் தனசொல்
    வழிபா டிவைகொண் டடிவாழ்த் தவல்லார்
    கெழியார் இமையோ ரொடுகே டிலரே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பால்வண்ணநாதர், தேவியார் - வேதநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்