MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.22 திருக்குடவாயில்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    230 திகழுந் திருமா லொடுநான் முகனும்
    புகழும் பெருமான் அடியார் புகல
    மகிழும் பெருமான் குடவா யில்மன்னி
    நிகழும் பெருங்கோ யில்நிலா யவனே. 01
    231 ஓடுந் நதியும் மதியோ டுரகம்
    சூடுஞ் சடையன் விடைதொல் கொடிமேல்
    கூடுங் குழகன் குடவா யில்தனில்
    நீடும் பெருங்கோ யில்நிலா யவனே. 02
    232 கலையான் மறையான் கனலேந் துகையான்
    மலையா ளவள்பா கம்மகிழ்ந் தபிரான்
    கொலையார் சிலையான் குடவா யில்தனில்
    நிலையார் பெருங்கோ யில்நிலா யவனே. 03
    233 சுலவுஞ் சடையான் சுடுகா டிடமா
    நலமென் முலையாள் நகைசெய் யநடங்
    குலவுங் குழகன் குடவா யில்தனில்
    நிலவும் பெருங்கோ யில்நிலா யவனே. 04
    234 என்றன் உளமே வியிருந் தபிரான்
    கன்றன் மணிபோல் மிடறன் கயிலைக்
    குன்றன் குழகன் குடவா யில்தனில்
    நின்ற பெருங்கோ யில்நிலா யவனே. 05
    235 அலைசேர் புனலன் னனலன் னமலன்
    தலைசேர் பலியன் சதுரன் விதிருங்
    கொலைசேர் படையன் குடவா யில்தனில்
    நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே. 06
    236 அறையார் கழலன் னமலன் னியலிற்
    பறையாழ் முழவும் மறைபா டநடங்
    குறையா அழகன் குடவா யில்தனில்
    நிறையார் பெருங்கோ யில்நிலா யவனே. 07
    237 வரையார் திரள்தோள் அரக்கன் மடியவ்
    வரையா ரவொர்கால் விரல்வைத் தபிரான்
    வரையார் மதில்சூழ் குடவா யில்மன்னும்
    வரையார் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே. 08
    238 பொன்னொப் பவனும் புயலொப் பவனுந்
    தன்னொப் பறியாத் தழலாய் நிமிர்ந்தான்
    கொன்னற் படையான் குடவா யில்தனில்
    மன்னும் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே. 09
    239 வெயிலின் நிலையார் விரிபோர் வையினார்
    பயிலும் முரையே பகர்பா விகள்பாற்
    குயிலன் குழகன் குடவா யில்தனில்
    உயரும் பெருங்கோ யிலுயர்ந் தவனே. 10
    240 கடுவாய் மலிநீர் குடவா யில்தனில்
    நெடுமா பெருங்கோ யில்நிலா யவனை
    தடமார் புகலித் தமிழார் விரகன்
    வடமார் தமிழ்வல் லவர்நல் லவரே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கோணேசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்