MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.23 திருவானைக்கா
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    241 மழையார் மிடறா மழுவா ளுடையாய்
    உழையார் கரவா உமையாள் கணவா
    விழவா ரும்வெணா வலின்மே வியவெம்
    அழகா எனும்ஆ யிழையாள் அவளே. 01
    242 கொலையார் கரியின் னுரிமூ டியனே
    மலையார் சிலையா வளைவித் தவனே
    விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய்
    நிலையா அருளாய் எனும்நே ரிழையே. 02
    243 காலா லுயிர்கா லனைவீ டுசய்தாய்
    பாலோ டுநெய்யா டியபால் வணனே
    வேலா டுகையா யெம்வெண்நா வலுளாய்
    ஆலார் நிழலாய் எனும்ஆ யிழையே. 03
    244 சுறவக் கொடிகொண் டவன்நீ றதுவாய்
    உறநெற் றிவிழித் தவெம்உத் தமனே
    விறல்மிக் ககரிக் கருள்செய் தவனே
    அறமிக் கதுவென் னுமெனா யிழையே. 04
    245 செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன்
    அங்கட் கருணை பெரிதா யவனே
    வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய்
    அங்கத் தயர்வா யினள்ஆ யிழையே. 05
    246 குன்றே யமர்வாய் கொலையார் புலியின்
    தன்றோ லுடையாய் சடையாய் பிறையாய்
    வென்றாய் புரமூன் றைவெண்நா வலுளே
    நின்றா யருளாய் எனும்நே ரிழையே. 06
    இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 07
    247 மலையன் றெடுத்த வரக்கன் முடிதோள்
    தொலையவ் விரலூன் றியதூ மழுவா
    விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய்
    அலசா மல்நல்காய் எனும்ஆ யிழையே. 08
    248 திருவார் தருநா ரணன்நான் முகனும்
    மருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய்
    விரையா ரும்வெண்நா வலுள்மே வியஎம்
    அரவா எனும்ஆ யிழையா ளவளே. 09
    249 புத்தர் பலரோ டமண்பொய்த் தவர்கள்
    ஒத்தவ் வுரைசொல் லிவையோ ரகிலார்
    மெய்த்தே வர்வணங் கும்வெண்நா வலுளாய்
    அத்தா அருளாய் எனும்ஆ யிழையே. 10
    250 வெண்நா வலமர்ந் துறைவே தியனை
    கண்ணார் கமழ்கா ழியர்தந் தலைவன்
    பண்ணோ டிவைபா டியபத் தும்வல்லார்
    விண்ணோ ரவரேத் தவிரும் புவரே. 11

    திருச்சிற்றம்பலம்