MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.25 திருப்புகலி
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    262 உகலி யாழ்கட லோங்கு பாருளீர்
    அகலி யாவினை யல்லல் போயறும்
    இகலி யார்புர மெய்த வன்னுறை
    புகலி யாம்நகர் போற்றி வாழ்மினே. 01
    263 பண்ணி யாள்வதோ ரேற்றர் பால்மதிக்
    கண்ணி யார்கமழ் கொன்றை சேர்முடிப்
    புண்ணி யன்னுறை யும்பு கலியை
    நண்ணு மின்னல மான வேண்டிலே. 02
    264 வீசு மின்புரை காதன் மேதகு
    பாச வல்வினை தீர்த்த பண்பினன்
    பூசு நீற்றினன் பூம்பு கலியைப்
    பேசு மின்பெரி தின்ப மாகவே. 03
    265 கடிகொள் கூவிளம் மத்தம் வைத்தவன்
    படிகொள் பாரிடம் பேசும் பான்மையன்
    பொடிகொள் மேனியன் பூம்பு கலியுள்
    அடிகளை யடைந் தன்பு செய்யுமே. 04
    266 பாதத் தாரொலி பல்சி லம்பினன்
    ஓதத் தார்விட முண்ட வன்படைப்
    பூதத் தான்புக லிந்ந கர்தொழ
    ஏதத் தார்க்கிட மில்லை யென்பரே. 05
    267 மறையி னான்ஒலி மல்கு வீணையன்
    நிறையி னார்நிமிர் புன்ச டையனெம்
    பொறையி னானுறை யும்பு கலியை
    நிறையி னாற்றொழ நேச மாகுமே. 06
    268 கரவி டைமனத் தாரைக் காண்கிலான்
    இரவி டைப்பலி கொள்ளும் எம்மிறை
    பொருவி டைஉயர்த் தான்பு கலியைப்
    பரவி டப்பயில் பாவம் பாறுமே. 07
    269 அருப்பி னார்முலை மங்கை பங்கினன்
    விருப்பி னான்அரக் கன்னு ரஞ்செகும்
    பொருப்பி னான்பொழி லார்பு கலியூர்
    இருப்பி னானடி யேத்தி வாழ்த்துமே. 08
    270 மாலும் நான்முகன் றானும் வார்கழற்
    சீல மும்முடி தேட நீண்டெரி
    போலு மேனியன் பூம்பு கலியுள்
    பால தாடிய பண்ப னல்லனே. 09
    271 நின்று துய்ப்பவர் நீசர் தேரர்சொல்
    ஒன்ற தாகவை யாவு ணர்வினுள்
    நின்ற வன்னிக ழும்பு கலியைச்
    சென்று கைதொழச் செல்வ மாகுமே. 10
    272 புல்ல மேறிதன் பூம்பு கலியை
    நல்ல ஞானசம் பந்தன் நாவினாற்
    சொல்லும் மாலையீ ரைந்தும் வல்லவர்க்
    கில்லை யாம்வினை இருநி லத்துளே. 11

    திருச்சிற்றம்பலம்