MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.26 திருநெல்வாயில்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    273 புடையி னார்புள்ளி கால்பொ ருந்திய
    மடையி னார்மணி நீர்நெல் வாயிலார்
    நடையி னால்விரற் கோவ ணந்நயந்
    துடையி னாரெம துச்சி யாரே. 01
    274 வாங்கி னார்மதில் மேற்க ணைவெள்ளந்
    தாங்கி னார்தலை யாய தன்மையர்
    நீங்கு நீரநெல் வாயி லார்தொழ
    ஓங்கி னாரெம துச்சி யாரே. 2
    275 நிச்ச லேத்தும்நெல் வாயி லார்தொழ
    இச்சை யாலுறை வாரெம் மீசனார்
    கச்சை யாவதோர் பாம்பி னார்கவின்
    இச்சை யாரெம துச்சி யாரே. 03
    276 மறையி னார்மழு வாளி னார்மல்கு
    பிறையி னார்பிறை யோடி லங்கிய
    நிறையி னாரநெல் வாயிலார் தொழும்
    இறைவ னாரெம துச்சி யாரே. 04
    277 விருத்த னாகிவெண் ணீறு பூசிய
    கருத்த னார்கன லாட்டு கந்தவர்
    நிருத்த னாரநெல் வாயில் மேவிய
    ஒருத்த னாரெம துச்சி யாரே. 05
    278 காரி னார்கொன்றைக் கண்ணி யார்மல்கு
    பேரி னார்பிறை யோடி லங்கிய
    நீரி னாரநெல் வாயிலார் தொழும்
    ஏரி னாரெம துச்சி யாரே. 06
    279 ஆதி யாரந்த மாயி னார்வினை
    கோதி யார்மதில் கூட்ட ழித்தவர்
    நீதி யாரநெல் வாயி லார்மறை
    ஓதி யாரெம துச்சி யாரே. 07
    280 பற்றி னான்அரக் கன்க யிலையை
    ஒற்றி னாரொரு கால்வி ரலுற
    நெற்றி யாரநெல் வாயி லார்தொழும்
    பெற்றி யாரெம துச்சி யாரே. 08
    281 நாடி னார்மணி வண்ணன் நான்முகன்
    கூடி னார்குறு காத கொள்கையர்
    நீடி னாரநெல் வாயி லார்தலை
    ஓடி னாரெம துச்சி யாரே. 09
    282 குண்ட மண்துவர்க் கூறை மூடர்சொல்
    பண்ட மாகவை யாத பண்பினர்
    விண்ட யங்குநெல் வாயி லார்நஞ்சை
    உண்ட கண்டரெம் உச்சி யாரே. 10
    283 நெண்ப யங்குநெல் வாயி லீசனைச்
    சண்பை ஞானசம் பந்தன் சொல்லிவை
    பண்ப யன்கொளப் பாட வல்லவர்
    விண்ப யன்கொளும் வேட்கை யாளரே. 11

    திருச்சிற்றம்பலம்