MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.32 திருவையாறு - திருவிராகம்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    339 திருத்திகழ் மலைச்சிறுமி யோடுமிகு தேசர்
    உருத்திகழ் எழிற்கயிலை வெற்பிலுறை தற்கே
    விருப்புடைய அற்புத ரிருக்குமிட மேரார்
    மருத்திகழ் பொழிற்குலவு வண்டிருவை யாறே. 01
    340 கந்தமர வுந்துபுகை யுந்தலில் விளக்கேர்
    இந்திர னுணர்ந்துபணி யெந்தையிட மெங்குஞ்
    சந்தமலி யுந்தரு மிடைந்தபொழில் சார
    வந்தவளி நந்தணவு வண்டிருவை யாறே. 02
    341 கட்டுவட மெட்டுமுறு வட்டமுழ வத்தில்
    கொட்டுகர மிட்டவொலி தட்டும்வகை நந்திக்
    கிட்டமிக நட்டமவை யிட்டவ ரிடஞ்சீர்
    வட்டமதி லுட்டிகழும் வண்டிருவை யாறே. 03
    342 நண்ணியொர் வடத்தினிழல் நால்வர்முனி வர்க்கன்
    றெண்ணிலி மறைப்பொருள் விரித்தவ ரிடஞ்சீர்த்
    தண்ணின்மலி சந்தகிலொ டுந்திவரு பொன்னி
    மண்ணின்மிசை வந்தணவு வண்டிருவை யாறே. 04
    343 வென்றிமிகு தாருகன தாருயிர் மடங்கக்
    கன்றிவரு கோபமிகு காளிகத மோவ
    நின்றுநட மாடியிட நீடுமலர் மேலால்
    மன்றல்மலி யும்பொழில்கொள் வண்டிருவை யாறே. 05
    344 பூதமொடு பேய்கள்பல பாடநட மாடிப்
    பாதமுதல் பையரவு கொண்டணி பெறுத்திக்
    கோதைய ரிடும்பலி கொளும்பர னிடம்பூ
    மாதவி மணங்கமழும் வண்டிருவை யாறே. 06
    345 துன்னுகுழல் மங்கையுமை நங்கைசுளி வெய்தப்
    பின்னொரு தவஞ்செய்துழல் பிஞ்ஞகனு மங்கே
    என்னசதி என்றுரைசெ யங்கண னிடஞ்சீர்
    மன்னுகொடை யாளர்பயில் வண்டிருவை யாறே. 07
    346 இரக்கமில் குணத்தொடுல கெங்கும்நலி வெம்போர்
    அரக்கன்முடி யத்தலை புயத்தொடு மடங்கத்
    துரக்கவிர லிற்சிறிது வைத்தவ ரிடஞ்சீர்
    வரக்கருணை யாளர்பயில் வண்டிருவை யாறே. 08
    347 பருத்துருவ தாகிவிண் ணடைந்தவனொர் பன்றிப்
    பெருத்துருவ தாயுல கிடந்தவனு மென்றுங்
    கருத்துரு வொணாவகை நிமிர்ந்தவ னிடங்கார்
    வருத்துவகை தீர்கொள்பொழில் வண்டிருவை யாறே. 09
    348 பாக்கியம தொன்றுமில் சமண்பதகர் புத்தர்
    சாக்கியர்க ளென்றுடல் பொதிந்துதிரி வார்தம்
    நோக்கரிய தத்துவ னிடம்படியின் மேலால்
    மாக்கமுற நீடுபொழில் வண்டிருவை யாறே. 10
    349 வாசமலி யும்பொழில்கொள் வண்டிருவை யாற்றுள்
    ஈசனை யெழிற்புகலி மன்னவன்மெய்ஞ் ஞானப்
    பூசுர னுரைத்ததமிழ் பத்துமிவை வல்லார்
    நேசமலி பத்தரவர் நின்மல னடிக்கே. 11

    திருச்சிற்றம்பலம்