MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.33 திருநள்ளாறு - திருவிராகம்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    350 ஏடுமலி கொன்றையர விந்துஇள வன்னி
    மாடவல செஞ்சடையெம் மைந்தனிட மென்பர்
    கோடுமலி ஞாழல்குர வேறுசுர புன்னை
    நாடுமலி வாசமது வீசியநள் ளாறே. 01
    351 விண்ணியல் பிறைப்பிள வறைப்புனல் முடித்த
    புண்ணியன் இருக்குமிட மென்பர்புவி தன்மேல்
    பண்ணிய நடத்தொடிசை பாடுமடி யார்கள்
    நண்ணிய மனத்தின்வழி பாடுசெய்நள் ளாறே. 02
    352 விளங்கிழை மடந்தைமலை மங்கையொரு பாகத்
    துளங்கொள இருத்திய ஒருத்தனிட மென்பர்
    வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி
    நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய்நள் ளாறே. 03
    353 கொக்கரவர் கூன்மதியர் கோபர்திரு மேனிச்
    செக்கரவர் சேருமிட மென்பர்தடம் மூழ்கிப்
    புக்கரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி
    நக்கரவர் நாமநினை வெய்தியநள் ளாறே. 04
    354 நெஞ்சமிது கண்டுகொ ளுனக்கென நினைந்தார்
    வஞ்சம தறுத்தருளும் மற்றவனை வானோர்
    அஞ்சமுது காகியவர் கைதொழ வெழுந்த
    நஞ்சமுது செய்தவன் இருப்பிடம்நள் ளாறே. 05
    355 பாலனடி பேணவவ னாருயிர் குறைக்குங்
    காலனுடன் மாளமு னுதைத்தஅர னூராங்
    கோலமலர் நீர்க்குட மெடுத்துமறை யாளர்
    நாலின்வழி நின்றுதொழில் பேணியநள் ளாறே. 06
    356 நீதியர் நெடுந்தகையர் நீள்மலையர் பாவை
    பாதியர் பராபரர் பரம்பர ரிருக்கை
    வேதியர்கள் வேள்வியொழி யாதுமறை நாளும்
    ஓதியரன் நாமமும் உணர்த்திடும்நள் ளாறே. 07
    357 கடுத்துவல் லரக்கன்முன் நெருக்கிவரை தன்னை
    எடுத்தவன் முடித்தலைகள் பத்தும்மிகு தோளும்
    அடர்த்தவர் தமக்கிடம தென்பரளி பாட
    நடத்தகல வைத்திரள்கள் வைகியநள் ளாறே. 08
    358 உயர்ந்தவ னுருக்கொடு திரிந்துலக மெல்லாம்
    பயந்தவன் நினைப்பரிய பண்பனிட மென்பர்
    வியந்தமரர் மெச்சமலர் மல்குபொழி லெங்கும்
    நயந்தரும வேதவொலி யார்திருநள் ளாறே. 09
    359 சிந்தைதிரு கற்சமணர் தேரர்தவ மென்னும்
    பந்தனை யறுத்தருளு கின்றபர மன்னூர்
    மந்தமுழ வந்தரு விழாவொலியும் வேதச்
    சந்தம்விர விப்பொழில் முழங்கியநள் ளாறே. 10
    360 ஆடலர வார்சடையன் ஆயிழைத னோடும்
    நாடுமலி வெய்திட இருந்தவன்நள் ளாற்றை
    மாடமலி காழிவளர் பந்தனது செஞ்சொல்
    பாடலுடை யாரையடை யாபழிகள் நோயே. 11

    திருச்சிற்றம்பலம்