MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.37 திருமறைக்காடு - கதவடைக்கப்பாடியபதிகம்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    393 சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்
    மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
    இதுநன் கிறைவைத் தருள்செய்க எனக்குன்
    கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே. 01
    394 சங்கந் தரளம் மவைதான் கரைக்கெற்றும்
    வங்கக் கடல்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
    மங்கை உமைபா கமுமா கவிதென்கொல்
    கங்கை சடைமே லடைவித்த கருத்தே. 02
    395 குரவங் குருக்கத்தி கள்புன்னை கள்ஞாழல்
    மருவும் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
    சிரமும் மலருந் திகழ்செஞ் சடைதன்மேல்
    அரவம் மதியோ டடைவித்த லழகே. 03
    396 படர்செம் பவளத்தொடு பன்மலர் முத்தம்
    மடலம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
    உடலம் முமைபங்க மதாகியு மென்கொல்
    கடல்நஞ் சமுதா அதுவுண்ட கருத்தே. 04
    397 வானோர் மறைமா தவத்தோர் வழிபட்ட
    தேனார் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வா
    ஏனோர் தொழுதேத்த இருந்தநீ யென்கொல்
    கானார் கடுவே டுவனான கருத்தே. 05
    398 பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி
    மலரால் வழிபாடு செய்மா மறைக்காடா
    உலகே ழுடையாய் கடைதோறு முன்னென்கொல்
    தலைசேர் பலிகொண் டதிலுண் டதுதானே. 06
    399 வேலா வலயத் தயலே மிளிர்வெய்துஞ்
    சேலார் திருமா மறைக்காட் டுறைசெல்வா
    மாலோ டயன்இந் திரனஞ்ச முன்னென்கொல்
    காலார் சிலைக்கா மனைக்காய்ந்த கருத்தே. 07
    400 கலங்கொள் கடலோதம் உலாவுங் கரைமேல்
    வலங்கொள் பவர்வாழ்த் திசைக்கும் மறைக்காடா
    இலங்கை யுடையான் அடர்ப்பட் டிடரெய்த
    அலங்கல் விரலூன்றி யருள்செய்த வாறே. 08
    401 கோனென்று பல்கோடி உருத்திரர் போற்றுந்
    தேனம் பொழில்சூழ் மறைக்கா டுறைசெல்வா
    ஏனங் கழுகா னவருன்னை முன்னென்கொல்
    வானந் தலமண்டி யுங்கண்டி லாவாறே. 09
    402 வேதம் பலவோமம் வியந்தடி போற்ற
    ஓதம் உலவும் மறைக்காட்டி லுறைவாய்
    ஏதில் சமண்சாக் கியர்வாக் கிவையென்கொல்
    ஆத ரொடுதா மலர்தூற் றியவாறே. 10
    403 காழிந் நகரான் கலைஞான சம்பந்தன்
    வாழிம் மறைக்கா டனைவாய்ந் தறிவித்த
    ஏழின் னிசைமாலை யீரைந் திவைவல்லார்
    வாழி யுலகோர் தொழவான் அடைவாரே. 11

    திருச்சிற்றம்பலம்