MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.39 திருக்ஷேத்திரக்கோவை
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    415 ஆரூர் தில்லையம் பலம்வல் லந்நல்லம்
    வடகச் சியுமச் சிறுபாக்கம் நல்ல
    கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி
    கடல்சூழ் கழிப்பாலை தென்கோடி பீடார்
    நீரூர் வயல்நின்றி யூர்குன்றி யூருங்
    குருகா வையூர் நாரையூர் நீடுகானப்
    பேரூர் நன்னீள் வயல்நெய்த் தானமும்
    பிதற்றாய் பிறைசூ டிதன்பே ரிடமே. 01
    416 அண்ணா மலையீங் கோயுமத்தி முத்தா
    றகலா முதுகுன் றங்கொடுங் குன்றமுங்
    கண்ணார் கழுக்குன் றங்கயிலை கோணம்
    பயில்கற் குடிகா ளத்திவாட் போக்கியும்
    பண்ணார் மொழிமங்கை யோர்பங் குடையான்
    பரங்குன் றம்பருப் பதம்பேணி நின்றே
    எண்ணாய் இரவும் பகலும் இடும்பைக்
    கடல் நீந் தலாங் காரணமே. 02
    417 அட்டா னமென் றோதியநா லிரண்டும்
    அழகன் னுறைகா வனைத்துந் துறைகள்
    எட்டாந் திருமூர்த் தியின்கா டொன்பதுங்
    குளமூன் றுங்கள மஞ்சும்பாடி நான்கும்
    மட்டார் குழலாள் மலைமங்கை பங்கன்
    மதிக்கும் மிடமா கியபாழி மூன்றுஞ்
    சிட்டா னவன்பா சூரென்றே விரும்பாய்
    அரும்பா வங்களா யினதேய்ந் தறவே. 03
    418 அறப்பள்ளி அகத்தியான் பள்ளிவெள் ளைப்பொடி
    பூசியா றணிவான் அமர்காட்டுப் பள்ளி
    சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன் பள்ளி
    திருநனி பள்ளி சீர்மகேந் திரத்துப்
    பிறப்பில் லவன்பள்ளி வெள்ளச் சடையான்
    விரும்பும் மிடைப்பள்ளி வண்சக்க ரம்மால்
    உறைப்பா லடிபோற்றக் கொடுத்த பள்ளி
    உணராய் மடநெஞ்ச மேயுன்னி நின்றே 04
    419 ஆறை வடமா கறலம்பர் ஐயா
    றணியார் பெருவேளூர் விளமர் தெங்கூர்
    சேறை துலைபுக லூரக லாதிவை
    காதலித் தானவன் சேர்பதியே. 05
    இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின.
    420 மனவஞ்சர் மற்றோட முன்மாத ராரும்
    மதிகூர் திருக்கூட லில்ஆல வாயும்
    இனவஞ் சொலிலா இடைமா மருதும்
    இரும்பைப் பதிமா காளம்வெற் றியூருங்
    கனமஞ் சினமால் விடையான் விரும்புங்
    கருகா வூர்நல் லூர்பெரும் புலியூர்
    தனமென் சொலிற்றஞ் சமென்றே நினைமின்
    தவமாம் மலமா யினதா னருமே. 06
    421 மாட்டூர் மடப்பாச் சிலாச்சி ராமம்
    முண்டீச் சரம்வாத வூர்வார ணாசி
    காட்டூர் கடம்பூர் படம்பக்கங் கொட்டுங்
    கடலொற்றி யூர்மற் றுறையூ ரவையுங்
    கோட்டூர் திருவாமாத் தூர்கோ ழம்பமுங்
    கொடுங்கோ வலூர்திருக் குணவாயில் 07
    இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின.
    422 குலாவு திங்கட்
    சடையான் குளிரும் பரிதி நியமம்
    போற்றூ ரடியார் வழிபா டொழியாத்
    தென்புறம் பயம்பூ வணம்பூ ழியூருங்
    காற்றூர் வரையன் றெடுத்தான் முடிதோள்
    நெரித்தா னுறைகோயில் லென் றென்றுநீ கருதே. 08
    இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின.
    423 நெற்குன்றம் ஓத்தூர் நிறைநீர் மருகல்
    நெடுவா யிற்குறும் பலாநீ டுதிரு
    நற்குன்றம் வலம்புரம் நாகேச் சுரம்நளிர்
    சோலை உஞ்சேனை மாகாளம் வாய்மூர்
    கற்குன்ற மொன்றேந் திமழை தடுத்த
    கடல்வண் ணனுமா மலரோனுங் காணாச்
    சொற்கென் றுந்தொலை விலாதா னுறையுங்
    குடமூக் கென்றுசொல் லிக்குலா வுமினே. 09
    424 குத்தங் குடிவே திகுடி புனல்சூழ்
    குருந்தங் குடிதே வன்குடி மருவும்
    அத்தங் குடிதண் டிருவண் குடியும்
    அலம்புஞ் சலந்தன் சடைவைத் துகந்த
    நித்தன் நிமலன் உமையோ டுங்கூட
    நெடுங்கா லமுறை விடமென்று சொல்லாப்
    புத்தர் புறங்கூ றியபுன் சமணர்
    நெடும்பொய் களைவிட் டுநினைந் துய்ம்மினே. 10
    425 அம்மா னையருந் தவமாகி நின்ற
    அமரர் பெருமான் பதியான வுன்னிக்
    கொய்ம்மா மலர்ச்சோலை குலாவு கொச்சைக்
    கிறைவன் சிவஞான சம்பந்தன் சொன்ன
    இம்மா லையீரைந் தும்இரு நிலத்தில்
    இரவும் பகலும் நினைந்தேத்தி நின்று
    விம்மா வெருவா விரும்பும் மடியார்
    விதியார் பிரியார் சிவன்சே வடிக்கே. 11
    இப்பதிகத்தில் வரும் குன்றியூர், இடைப்பள்ளி, மாட்டூர், வாதவூர்,
    வாரணாசி, கோட்டூர், குணவாயில், நெற்குன்றம், நற்குன்றம்,
    நெடுவாயில், உஞ்சேனைமாகாளம், குத்தங்குடி, குருந்தேவன்குடி,
    மத்தங்குடி, திருவண்குடி இவைகட்குத் தனித்தனித்
    தேவார மில்லாமையால் வைப்புத்தலமென்று சொல்லப்படும்.
    திருச்சிற்றம்பலம்